இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது - சீ.வீ.கே

16 May 2019

அண்மையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள், கடைகள் தாக்கப்படும் போது அங்கிருந்த பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்திருந்தால்  அவசரகாலச் சட்டம் செயற்பட்டும் பிரயோசனமில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினர், இந்த நாட்டினுடைய இராணுவத்தினரே தவிர ஒரு இனத்தினுடையவர்கள் அல்லர். குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களது கடமை.

இந்நிலையில், அவசரகாலச் சட்ட காலத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்