19 Mar 2023
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவற்றின் பதவிக் காலத்தை நீடிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல, திருட்டுப் பாதையில் மீண்டும் செல்லத் தயாராக வேண்டாம் என்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.