உலகம் செய்திகள்

உலக தலைவர்களில் டிரம்பை அடுத்து பிரதமர் மோடி

06 Dec 2017

இந்த ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட மற்றும் விருப்பம் தெரிவிக்கப்பட்ட டுவீட் பதிவுகளின் பட்டியலை டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் பத்து இடங்களில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் இரண்டு டுவீட்ஸ் ஆண்டின் மிகவும் பிரபலமான 10 ட்வீட்களில் ஒன்றாக இருந்தது.

முதல் 10 பேர் பட்டியலில் வெனிசுலாவில் இருந்து நிக்கோலா மடோரோ,  துருக்கியின் ரெசெப் தயிப் எர்டோகன்,பிரான்சில் இருந்து இம்மானுவல் மேக்ரோன்,மெக்சிகோவின் என்ரிக் பெனா நீடோ,  அர்ஜென்டினாவின் மாரிசிப் மெக்ரி,பிரிட்டனின் தெரசா மே,கொலம்பியாவின் ஜுவான் மானுவல் சந்தோஷ், இந்தோனேசியாவின் அகுன் ரிமி ஜோகோ ஜோர்டோ விடோடோ இடம் பெற்று உள்ளனர்.

டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை   பட்டியலில் இந்திய அளவில் மோடி முதலிடம் பிடித்து உள்ளார். உலக அளவில் டொனால்டு டிரம்புக்கு 44.1 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர். இந்தியாவில் பிரதமர் மோடிக்கு 37.5 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.

 

 

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV