விளையாட்டு செய்திகள்

உலக தரவரிசையில் இந்திய ஆக்கி அணி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

19 Sep 2023

ஆக்கி அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி நெதர்லாந்து (3113 புள்ளி) முதலிடத்திலும், பெல்ஜியம் (2989 புள்ளி) 2-வது இடத்திலும் நீடிக்கின்றன. இந்திய அணி ஒரு இடம் முன்னேறி (2771 புள்ளி) 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது. 2022-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு இந்திய அணி 'டாப்-3' இடத்துக்குள் வருவது இதுவே முதல்முறையாகும்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடரில் 6 வெற்றி, ஒரு டிரா கண்டதன் மூலம் இந்தியா இந்த ஏற்றம் கண்டுள்ளது. இங்கிலாந்து அணி (2745 புள்ளி) ஒரு இடம் சரிந்து 4-வது இடம் பெற்றுள்ளது. ஜெர்மனி (2689), ஆஸ்திரேலியா (2544), அர்ஜென்டினா (2350), ஸ்பெயின் (2347), பிரான்ஸ் (2085), மலேசியா (2041) முறையே 5 முதல் 10 இடங்களில் உள்ளன.

பெண்கள் அணிகளுக்கான தரவரிசையில் நெதர்லாந்து (3422) முதலிடத்திலும், ஆஸ்திரேலியா (2818) 2-வது இடத்திலும், அர்ஜென்டினா (2767) 3-வது இடத்திலும், பெல்ஜியம் (2609) 4-வது இடத்திலும், ஜெர்மனி (2574) 5-வது இடத்திலும், இங்கிலாந்து (2327) 6-வது இடத்திலும் தொடருகின்றன. இந்திய அணி (2325) ஒரு இடம் அதிகரித்து 7-வது இடத்தை பிடித்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam