உலகம் செய்திகள்

உலக கால்பந்துபோட்டி வீரர்களின் முகமூடிகள் விற்பனைக்கு வருகிறது

16 May 2018

உலக கோப்பை கால்பந்துபோட்டி ரஷ்யாவில் வரும் ஜீன் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நட்சத்திர வீரர்களின் முகத்தோற்றம் கொண்ட முகமூடிகள் மெக்சிகோவில் விறுவிறுப்பாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

மெக்சிகோவின் முகமூடி தயாரிப்பு நிறுவனமான Ghoulish, அர்ஜெண்டினாவின் Lionel Messi, போர்ச்சுகல் வீரரான Cristiano Ronaldo, பிரேசிலின் Neymar Jr, மற்றும் கால்பந்து ஜாம்பவனான Diego Maradona உள்ளிட்ட பிரபலமான 12 வீரர்களின் தோற்றம்கொண்ட முகமூடிகளை முழூவீச்சில் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

உலகப்கோப்பை போட்டிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், 13 அமெரிக்க டாலர் வரை விற்கப்படும் இந்த முகமூடிகள் ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்