06 Dec 2018
ஜப்பானில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பேஜர் சேவை இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துடன் தனது சேவையை நிறுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது டோக்கியோ டெலி என்னும் ஜப்பான் நிறுவனம்.
டோக்கியோ டெலி மெசேஜ் எனும் அந்த சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இப்போது 1500 பேர் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக அந்த நிறுவனம் பேஜர் உற்பத்தியையும் நிறுத்திவிட்டது.
1950 – 1960 ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட பேஜர், 1980களில் பிரபலமாக இருந்தது. 1996 ஆம் ஆண்டில் டோக்கியோ டெலி மெசேஜ் சந்தாதாரர்களாக 12 லட்சம் பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.