இலங்கை செய்திகள்

உலகின் மிக நீளமான கேக்கை வாளினால் வெட்டி ஆரம்பித்து வைத்தார் பிரதமர்

16 Apr 2018

நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில், உலகின் மிக நீளமான உருளைக்கிழங்கு கேக் தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கேக்கினை நுவரெலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று  பார்வையிட்டார். அதேவேளை அந்த கேக்கினை வாளினால் வெட்டி  ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் பிரதமரினால் மேற்கொள்ளப்பட்டது.

380 கிலோ கிராம் நிறையுடைய இந்த கேக் 111 மீற்றர் நீளத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்