இந்தியா செய்திகள்

உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப்

17 Oct 2018

உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ சேவை வலைதளமான யூடியூப் முடங்கியது. யூடியூப் சேவை முடங்கியதால், இணையவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறால் யூடியூப் சேவை முடங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

யூடியூப் சேவை முடங்கியதாக டுவிட்டரில் அதன் பயனாளர்கள் அதிக அளவில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யூடியூப்டவுன் என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகியுள்ளது. யூடியூப் முடங்கியதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்