கனடா செய்திகள்

உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டியில் தகுதி பெற்ற கனடா அணி

10 Aug 2017

2018 இல் நியுசிலாந்தில் நடைபெற இருக்கின்ற 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றுவதற்கான தெரிவுப்போட்டியில் 3 நாடுகள் பங்கெடுத்தன .ஏற்கனவே பேர்முடா அணியை 2-0 என்ற வெற்றி கொண்ட கனடா அணி இறுதிப்போட்டியில் அமெரிக்க அணியையும் வெற்றி கொண்டு உலகக்கிண்ண போட்டிக்குள் விளையாடத் தகுதிபெற்றுள்ளது.

கனடா அணிக்கும் அமெரிக்கா அணிக்கும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய அமரிக்கா அணி 132ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது பதிலுக்கு துடுப்பெடுத்து ஆடிய கனடா அணி 133 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியை தனதாக்கியது.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட 19 வயதுக்குட்பட்டவருக்கான உலககிண்ண கிரிக்கட் போட்டிகள் 2018 ஜனவரி13 முதல் பெப்பிரவரி 3 வரை நடைபெறும். மூன்றாவது தடவையாக (2002 மற்றும் 2010 நிகழ்வுகள்க்குப் பின்னர்) உலககிண்ண கிரிக்கட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV