இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

14 Feb 2020

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று  மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹில்ஹாம் அஹமட் என்ற குண்டுதாரியின் தந்தை உள்ளிட்ட 6 பேரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்