இலங்கை செய்திகள்

உமையாள்புரத்தில்  ஐம்பது குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

12 Jan 2019

கிளிநொச்சி- கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட உமையாள்புரம் பகுதியில்,  ஐம்பது குடும்பங்களுக்கு ஏழரை இலட்சம் ரூபாய் பெறுமதியில் வீடுகளை அமைப்பதற்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதில்  நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஆளுனரின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் வீடமைப்பு அதிகார சபையின் கிளிநொச்சி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த வீடமைப்பு திட்டம் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்