இலங்கை செய்திகள்

உதயங்க வீரதுங்க கைது

14 Feb 2020

இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் புறக்கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை 4.37 மணியளவில் மஸ்கட்டிலிருந்து இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்