கனடா செய்திகள்

உணவுக் கொள்வனவை குறைத்துக் கொண்டுள்ள மக்கள்

21 Sep 2022

கனடாவில் மக்கள் உணவுக் கொள்வனவை குறைத்துக் கொண்டுள்ளதாக அண்மையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவி வரும் பணவீக்கம் காரணமாக 25 வீதமான மக்கள் தங்களது உணவுக் கொள்வனவை குறைத்துக் கொண்டுள்ளனர்.

வழமையாக தாங்கள் கொள்வனவு செய்யும் உணவு வகைகளை அவர்கள் குறைத்துக் கொண்டுள்ளனர்.

Dalhousie University's Agri-Food Analytics Lab மற்றும் Caddle ஆகிய நிறுவனங்களினால் இந்த கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டுள்ளது.

கடந்த 8ம் திகதி மற்றும் 10ம் திகதி இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மளிகைப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக இவ்வாறு தாங்கள் உணவுப் பொருட்கள் கொள்வனவை குறைத்து வருவதாக கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தினால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் சுமார் 75 வீதமான நுகர்வோர் தங்களது கொள்வனவு முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam