கனடா செய்திகள்

உடைந்த சாலையில் உட்புகுந்த கார்கள்

22 Sep 2022

வாகன நிறுத்துமிடம் ஒன்று திடீரென தாழிறங்கியதன் காரணமாக நான்கு வாகனங்கள் அந்த குழிக்குள் புதையுண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் தென் எட்மாண்டன் பகுதியில் காணப்படும் வாகன விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்கு நின்ற கார்களே இவ்வாறு திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிலம் தாழிறங்கும் சந்தர்ப்பங்கள் வெகு அரிது என தெரிவிக்கப்படுகிறது.

பெரிய குழி ஏற்பட்டு விட்டதாகவும் அதிர்ஷ்டவசமாக நான்கு வாகனங்கள் மட்டுமே அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது எனவும்இ  இவ்வாறு குழிக்குள் தாழிறங்கிய வாகனங்களுக்கு பெரிய அளவில் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குழிக்குள் தாழிறங்கிய வாகனங்களை மீட்டு எடுப்பதற்கு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் செலவிட நேரிட்டதாக கூறப்படுகிறது.

திடீரென நிலம் தாழிறங்கி குழி ஏற்பட்ட சம்பவம் அருகாமையில் இருந்த சி சி டிவி கேமராவில் பதிவாகி இருந்த போதிலும் அந்த தகவல்களை குறித்த நிறுவனம் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam