இலங்கை செய்திகள்

உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

08 Nov 2018

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய அமெரிக்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹேதர் நயட் தனது டுவிட்டர் பக்கத்தில், நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஏற்படும் தாமதம் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் நல்லாட்சி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதே வேளை இலங்கையின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் கவலையடைவதாக பிரித்தானியா கூறியுள்ளது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்