கனடா செய்திகள்

இளையோருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் கனேடிய அரசு தோல்வி

09 Jul 2017

தொழில்வாய்ப்பு, ஆற்றல் மற்றும் பயிற்சி தொடர்பாக இளையோருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதில் கனேடிய அரசு தோல்வி கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிபரல் அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கு இணங்க தயாரிக்கப்பட்ட பொதுக்கள் கருத்துகணிப்பு அறிக்கையில், இளையோர் தமது தொழில்வாய்ப்புகள் தொடர்பில் இணையத்தை மாத்திரமே உபயோகப்படுத்துகின்ற போதிலும் அரச இணையத்தளம் பயனற்றது என்றே பெரும்பாலானோர் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 16 முதல் 30 வயதுடைய 109 பேரை 16 குழுக்களாக பிரித்து இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த கருத்துக் கணிப்பிற்கான ஹலிபக்ஸ் நகரைச் சேர்ந்த corporate Reseach Associates  நிறுவனத்திற்கு 54 ஆயிரம் டொலர்கள் கட்டணமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV