இலங்கை செய்திகள்

இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை

11 Feb 2019

வெலிபென்ன, லிஹினியாவ பகுதியில் இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெருங்கிய நண்பர்களான இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தின் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் மீகஹதென்ன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

லிஹினியாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெலிபென்ன ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்