இலங்கை செய்திகள்

இலத்திரனியல் ஊடகங்களுக்கான நெறிமுறை

23 Sep 2022

இலத்திரனியல் ஊடகங்களுக்கான நெறிமுறை அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக புதிய ஒலிபரப்புச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் ஊடக கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் இது தொடர்பான யோசனை வெகுஜன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீதி அமைச்சர் தலைமையில் குறித்த அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam