இலங்கை செய்திகள்

இலங்கை செல்லும் பிரித்தானியருக்கு எச்சரிக்கை!

09 Jul 2017

இலங்கையில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு நுளம்புகளில் இருந்து தம்மை பாதுகாப்பதோடு, திடீர் காய்ச்சல் ஏற்படுமிடத்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியா அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வருடங்களை விட இலங்கையில இம்முறை டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு, இதுவரை சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, உயிரிழப்புக்கள் 700ஐ தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, தமது சுற்றுப்புற சூழலை சுத்தமாக வத்திருக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV