விளையாட்டு செய்திகள்

இலங்கை அணியில் இருந்து மலிங்கா உள்பட 10 வீரர்கள் விலகல்

10 Sep 2019

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் தொடருக்கான போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று இலங்கை 20 ஓவர் அணியின் கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன் மேத்யூஸ், திசரா பெரேரா உள்பட 10 வீரர்கள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து இருக்கின்றனர். இதனால் திட்டமிட்டபடி இலங்கை அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அதன் பிறகு பாதுகாப்பு கருதி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்