இலங்கை செய்திகள்

இலங்கையில் சீனத் திரைப்பட விழா

11 Feb 2019

4ஆவது சீனத் திரைப்பட விழா மகிழ்ச்சியான வசந்த விழா என்ற தலைப்பில், பிப்ரவரி 1ஆம் தேதி இரவு இலங்கை தேசியத் திரைப்பட நிறுவனத்தின் திரையரங்கில் துவங்கியது. இலங்கைக்கான சீனத் தூதர் சேங் சுயேயுவான், இலங்கை தேசியத் திரைப்பட நிறுவனத்தின் பொது மேலாளர் நிமால் அபவர்தனா மற்றும் பல்வேறு துறையினர் என 120 பேர் இவ்விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

சீனத் தூதர் சேங் சுயேயுவான் பேசுகையில், மகிழ்ச்சியான வசந்த விழா என்ற தலைப்பில் ஏற்கனவே தொடர்ந்து 4 முறை நடத்தப்பட்டுள்ள இந்தத் திரைப்பட விழா இலங்கை மக்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பண்பாட்டுப் பரிமாற்றம் இருநாட்டு மக்களின் நட்புறவை மேம்படுத்தும் முக்கிய வழிமுறையாகும். இந்தத் திரைப்பட விழாவின் மூலம், சீன-இலங்கை பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பும், இருநாட்டுறவும் மேலும் மேம்படும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்