இலங்கை செய்திகள்

இலங்கையின் அரசியல் நிலவரங்கள் கவலையளிப்பதாக பிரித்தானியா தெரிவிப்பு

08 Nov 2018

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மிகவும் கவலையளிப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் எமிலி தோர்ன்பெரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை. அரசியலமைப்பு மதிக்கப்படுவதையும், அரசியல் மற்றும் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன்.

சபாநாயகருடன் கலந்துரையாடி, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, இலங்கை மக்களின் குரலை ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் வெளிப்படுத்த வாய்ப்பளிக்குமாறு, கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியை கோரும் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டேன்.” என குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்