இலங்கை செய்திகள்

இறுதி யுத்தத்தில் 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்ததாக மஹிந்த தெரிவிப்பு

13 Sep 2018

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலைபுலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த  சுப்பிரமணியம் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் டெல்லியில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

“இறுதி யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக சர்வதேச ரீதியில் இடம்பெற்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. அத்துடன் நாங்கள் ஒருபோதும் இனவாத யுத்தத்தை முன்னெடுக்கவில்லை. இராணுவ நடவடிக்கைகளானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமைந்நதே தவிர  தமிழ் சமூகத்துக்கு எதிராக இயங்கவில்லை.

மேலும் ரஜீவ் காந்தி மற்றும் மேலும் பலர் உயிரிழப்பதற்கு காரணமாகவிருந்த இந்த பயங்கரவாத அமைப்பானது இலங்கைக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது” எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV