இலங்கை செய்திகள்

இராணுவத் தளபதி நல்லூரில் இன்று வழிபாடு

14 Aug 2019

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கு இன்று சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அத்தோடு, நல்லூர்க்கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்வசகால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இதன்போது இராணுவத் தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவ தளபதி உள்ளிட்ட இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டனர். இராணுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்