இலங்கை செய்திகள்

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு பாதுகாப்பளிப்பது குற்றச் செயல்

12 Aug 2017

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற மற்றும், விடுமுறை பெறாமால் கடமைக்கு திரும்பாதிருக்கும் இராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பளிப்பது தண்டனைக்குறிய குற்றமாகும் என்று இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இதனைக் கூறியுள்ளார். 

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற மற்றும் விடுமுறை பெறாமால் கடமைக்கு திரும்பாதிருக்கும் இராணுவ வீரர்கள் பொய்யான தகவல்களை வழங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி புரிந்து வருவதாக இராணுவப் பேச்சாளர் அந்த அறிக்கை மூலம் கூறியுள்ளார். 

இதுபோன்ற இராணுவ வீரர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவது மற்றும் பாதுகாப்பு வழங்குவதானது நாட்டில் காணப்படுகின்ற சட்டத்தின் நீதிமன்றத்தால் தண்டனை பெறக் கூடிய குற்றமாகும் என்று பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன கூறியுள்ளார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV