கனடா செய்திகள்

இரத்த தானம் செய்து நன்றியை வெளிப்படுத்தியுள்ள சிரிய மக்கள்

16 Apr 2018

கனடாவில் தஞ்சமடைந்துள்ள சிரிய மக்கள், தமக்கு ஆதரவளித்ததற்காக இரத்த தானம் செய்து தமது நன்றியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கனடாவில் ஒட்டாவைச் சேர்ந்த “சமாதான மனிதர்கள்” எனும் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இரத்ததான முகாமில் சிரிய மக்களும் கலந்துகொண்டனர்.

கனடாவின் 10 நகரங்களில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் சிரிய மக்களும் மிக ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது “இரத்த தானம் அளிப்பது வாழ்க்கை கொடுப்பதற்குச் சமனாகும். இது எங்களுக்கு வாழ்வளித்த கனடாவிற்கு நாங்கள் செய்யும் கைம்மாறு ஆகும்” என்று சிரிய அகதியொருவர் தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்