வாழ்வியல் செய்திகள்

இரத்தத்தை சுத்திகரிக்கும் வெந்தய தேனீர்!

16 Oct 2018

வெந்தயம் சமையலில் பயன்படுகிறது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், கொழுப்பு ஆகிய  சத்துக்களை கொண்டுள்ளது. இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடிய பொருள். மேலும் இதை நாம் குறைந்த அளவில்  சமையலுக்கு சேர்க்கிறோம். இதன் இலைகள் வெந்தய கீரை என்று அழைக்கிறோம்.
 
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும்  டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.
 
வெந்தய டீ தயாரிக்க: ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி  வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து  குடிக்கலாம்.
 
மாதவிடாய் காலத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம்  கிடைக்கும்.
 
வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி,  முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து  முழுவதுமாக தடுக்கலாம்.
 
வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம்,  இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும்.
 
காய்ச்சல் அடிக்கும் போது, வெந்தய டீயைக் குடித்தால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.
 
தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின்  கண்டிஷனர் பயன்படுத்துவதால் பொடுகு போய்விடும்.
 
தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் புண் மற்றும் தொண்டைப்  புண்சரியாகும். நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.
 
ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை  சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்