கனடா செய்திகள்

இரண்டு சிறுவர்களை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற மனிதன்

12 Oct 2017

ரொறொன்ரோவை சேர்ந்த 53-வயதுடைய மனிதனொருவர் இரண்டு சிறுவர்களை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நோர்த் யோர்க்கில் ஜேன் வீதி மற்றும் Steeles அவெனியு மேற்கில் சனிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரு சிறுவர்களும் 10-வயதிற்குட்பட்டவர்களாவர். குறிப்பிட்ட மனிதன் பிள்ளைகள் இருவருடனும் வீட்டில் இருந்ததாகவும் இருவருக்கும் சுத்தியலால் தலையில் அடித்ததாகவும் அவர்களை பின்னர் மூச்சுத்திணற செய்ததாகவும் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது

பிள்ளைகள் இருவரும் உயிராபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருவரும்  தற்சுபோது  சுகமடைந்து வருகின்றனர்.

 பிள்ளைகளை கொலை செய்ய முயன்றது, கொடுமைப் படுத்தியது மற்றும் மூச்சு திணற செய்தமை ஆயுதத்தால் தாக்கியமை போன்ற குற்றங்கள் குறித்த நபர் மீது  சுமத்தப்பட்டுள்ளன..






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்