இலங்கை செய்திகள்

இரண்டாம் நாளாகவும் பணிப்புறக்கணிப்பு

25 Nov 2021

சுகாதார பணியாளர்கள் இரண்டாம் நாளாக இன்று (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாதியர், இடைநிலை வைத்தியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் நேற்று (24) முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளன.

சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இப்போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்று வைத்தியசாலைக்கு சென்றிருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam