சினிமா செய்திகள்

இரஞ்சித் இயக்கத்தில் தனுஷ்

16 May 2018

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தை அடுத்து, தனுஷை வைத்து படம் பா.இரஞ்சித் படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கபாலி முடிந்த பிறகு மீண்டும் இரஞ்சித் ரஜினியை இயக்குவாரா? என்று சலசலப்பு எழுந்தது. ஆனால் உடனே ரஜினி - இரஞ்சித் கூட்டணி அமையக் தனுஷ் தான் காரணமாக இருந்திருக்கிறார். தனுஷ் தான் கதையை கேட்டு ரஜினியிடம் அனுப்பியதோடு தாமே தயாரிக்க முன்வந்தார்.

இரஞ்சித்தின் இயக்கமும் ஒருங்கிணைப்பும் பிடித்து போனதால் தனக்கும் ஒரு கதை தயார் செய்யுமாறு கேட்டிருக்கிறாராம். இரஞ்சித்துக்காக நீண்ட காலமாக சூர்யாவும் காத்திருக்கிறார்.

அடுத்தடுத்து ரஜினி படம் இயக்கியதால் சூர்யாவை காத்திருக்க வைத்திருந்தார் இரஞ்சித். எனவே அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு பின்னர் தனுசை வைத்து இயக்கலாம். காலா வெளியீட்டிற்கு பின்னர் தான் இது உறுதிபடுத்தப்படும்.

அனேகமாக இரஞ்சித் தனுஷ் இணையும் படமும் அரசியல் படமாகவே இருக்கலாம். தனுஷ் ஏற்கனவே கொடி என்ற அரசியல் படத்தில் நடித்தாலும் சமூகம் சார்ந்த படங்களில் அதிகம் நடித்ததில்லை. எனவே இரஞ்சித்திடம் அவர் பாணியிலேயே கதை தயார் செய்ய சொல்லியிருக்கிறாராம்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்