இலங்கை செய்திகள்

இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட ஒரு தொகை தேயிலை மீட்பு

13 Jun 2019

இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட ஒரு தொகை தேயிலை கொழுந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.  புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள தேயிலை உற்பத்தி நிலையம் ஒன்றில் வைத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.  இரசாயனப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட சுமார் 178 கிலோ கிராம் தேயிலை கொழுந்துகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்