இந்தியா செய்திகள்

இமாசல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

12 Jan 2019

இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் இன்று மதியம் 12.31 மணியளவில் லேசான அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.  இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.

இதில் ஏற்பட்ட பொருட்சேதம் அல்லது உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இதுபற்றி சிம்லா நகர வானிலை மைய இயக்குனர் மன்மோகன் சிங் கூறும்பொழுது, இந்நிலநடுக்கம் சம்பா மாவட்டத்தின் வடகிழக்கே 5 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.  அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்