இலங்கை செய்திகள்

இன்று வரவிருந்த பெற்றோல் கப்பல் தாமதம்

23 Jun 2022

40,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலுடன்  இன்று (23) காலை இலங்கையை வந்தடைய இருந்த கப்பல் சுமார் ஒரு நாள் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர தன்னுடைய டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்றும் நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகமே இடம்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam