இலங்கை செய்திகள்

இன்று பிற்பகல் 02 மணிக்கு ஊரடங்கு மீண்டும் அமுல்

13 May 2022

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

இதே வேளை, இன்று (13) பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் கீழ் அன்றி  நடமாடுவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam