இலங்கை செய்திகள்

இன்று பாடசாலைக்கு சென்ற வைசாலிக்கு வரவேற்பு

19 Sep 2023

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதனால் தனது கையினை மணிக்கட்டிற்கு கீழ் இழந்த வைசாலி என்ற மாணவி  இன்று (19) மீண்டும் பாடசாலைக்கு சென்றார்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்த போது சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

வைசாலி பாடசாலைக்கு சென்ற போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் அவரை பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam