ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 7-10-2022 முதல் 13-11-2022 வரை

10 Nov 2022

 

 

 

இந்த வார ராசிபலன் 7-10-2022 முதல் 13-11-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

 

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து ஒரு முடிவை மேற்கொள்ள வேண்டும். அவசரப்பட்டு ஆழம் தெரியாமல் எந்த பிரச்சனையிலும் காலை விடாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உங்களை ஏளனமாக பேசியவர்களின் முன்பு சாதித்து காண்பிப்பீர்கள். கடன் வாங்குவதை குறைத்துக் கொள்வது நல்லது. அதிக வட்டிக்கு கடன் வாங்கவே கூடாது. பெரியவர்களிடம் மதிப்பு மரியாதை யோடு நடந்து கொள்ள வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய உழைப்புக்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சில பேருக்கு வேலை காரணமாக நீண்ட தூர பயணம் செய்வதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழில் செய்பவர்கள் முதலீட்டில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பங்கு சந்தையில் இருப்பவர்களுக்கு அதிக கவனம் தேவை. சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். வீட்டில் இருப்பவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டிய வாரம். யார் சொல்லுவதைக் கேட்டும் ஏமாறக்கூடாது. அதாவது அடுத்தவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்கலாம். ஆனால் அவர்கள் சொல்வதை முழுமையாக நம்பி எந்த ஒரு வேலையும் செய்யாதீங்க. நீங்க யோசிங்க. உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலை எப்போதும் போல செல்லும். பிரச்சனைக்கு இடமில்லை. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. நிறைய வாய்ப்புகள் வந்து உங்கள் வீட்டு கதவை தட்டும். என்னால் முடியாது என்று சொல்லாதீங்க. நீங்க தோற்றாலும் பரவாயில்லை. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், என்ற தாரக மந்திரம் உங்கள் மனதில் இப்போது இருக்க வேண்டும். ஆரம்பத்தில் சின்ன சின்ன சிக்கல்களும் சரிவுகளும் வரலாம். இறுதியில் வெற்றி உங்களுக்கே. உங்களுடைய பொருட்களை கொஞ்சம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை முழுமையாக நம்ப வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகத்தான் செய்யும். முன்கோபத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். முன்பின் யோசித்து முடிவுகளை எடுங்கள். அனாவசியமான வார்த்தைகளை யாரிடமும் கோபமாக பேசாதீங்க. போட்டி பொறாமைகள் நிறைந்த இந்த உலகத்தில் ஊரோடு ஒத்து வாழ்வது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது. மற்றபடி சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைக்கு இடையே மட்டும் அப்பப்ப சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரும். சொந்தத் தொழிலில் பார்ட்னரிடம் உஷாராக இருந்துக்கோங்க. குறிப்பாக உங்களுடைய உறவுகளிடம் நாசுக்காக நடந்து கொள்ளுங்கள். பிரிந்த உறவு மீண்டும் சேராது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக தான் இருக்கும். நீங்கள் நிறைய முயற்சி எடுத்தாலும் ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாது. முயற்சியே எடுக்கவில்லை எனும்போது அந்த காரியம் உங்களுக்கு சாதகமாக நடந்துவிடும். இப்படி எதிர்மறையாக சில விஷயங்கள் கூட நடக்கலாம். குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் அதை உடனடியாக சரி பார்க்கவும். எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரத்தில் முட்டுக்கட்டையாக எதுவும் வந்து நிற்காது. தொழிலை தாராளமாக விரிவு படுத்தலாம். சேமிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினர் சாதனை படைப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாம் வெற்றி தரக்கூடிய வகையில் அமையும். அடுத்தவர்களுடைய கையை எதிர்பார்க்க மாட்டீங்க. சொந்தமாக நீங்களே உங்களுடைய முயற்சியில் சில காரியங்களில் வெற்றி அடைய வேண்டும் என்று சிந்திப்பீர்கள். அதில் ஒன்றும் தவறு கிடையாது. இருப்பினும் உதவிக்கு அடுத்தவர்களை கூப்பிடுவதிலும் எந்த தவறும் கிடையாது. எதை முதலில் செய்வது எதை பின்னால் செய்வது என்று தெரியாமல் திணறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் நிதானமாக யோசித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றபடி சொந்த தொழில், வேலை என்று எல்லாம் சரியாக இயங்கும். தினம் தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் சொல்லுங்கள். இந்த வாரம் 8, 9 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். அதே போல செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். கூடுமானவரை மூன்றாவது நபர்களின் விஷயத்தில் நீங்கள் மூக்கை நுழைக்காதீங்க. உங்களுடைய குடும்பப் பிரச்சனைகளை மூன்றாவது மனிதர்களிடம் சொல்லவும் வேண்டாம். தொழிலில் பார்ட்னரிடம் உஷாராக இருக்க வேண்டும். கணக்கு வழக்குகளை சரிவர சரி பார்க்கவும். வீட்டில் உங்களுடைய பேச்சுக்கு எதிராக சில சமயம் பிள்ளைகளின் நடவடிக்கை இருக்கும். கோபப்படாமல் அவர்களை நல்வழிப்படுத்துங்கள். செய்யும் வேலையில் கொஞ்சம் கவனம் தேவை. மேல் அதிகாரிகளை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். இந்த வாரம் 10 ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல காலம் பிறக்கப் போகின்றது. நிறைய நல்ல மாற்றங்கள் உங்களை வந்து சேரும். எதிர்பாராத நல்லது தொலைபேசியின் மூலம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அந்த நல்ல செய்தி உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடுத்த ஒரு படியாக அமையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிக்கு பிடித்த பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. புதியதாக வீடு கட்டுபவர்கள் இந்த நேரத்தில் தொடங்கலாம். வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் இருக்கும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப் போகின்றது. வெற்றி மேல் வெற்றி குவியும். அதே சமயம் போட்டிகளும் பொறாமைகளும் உங்களை துரத்தும். எல்லா விஷயத்திற்கும் ஈடு கொடுத்து வாழ்க்கையில் முன்னேறக்கூடிய தருணம் இது. வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். உங்களுடைய திறமை வெளிப்படப் போகின்றது. எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வருமானம் வரும் ஆனால் கையில் பணம் தாங்காது. கடனுக்கு வட்டிக்கட்டியே உங்களுடைய காலம் கழிந்து விட்டது. இனி கடனை திருப்பிக் கொடுப்பதற்குள் போதும் போதும் என மாறிவிடும். வருமானத்திற்கு மேல் செலவு. வீட்டில் சுப செலவுகள் வேற ஒன்றன்பின் ஒன்றாக வரும். சந்தோஷம் நிறைவாகத்தான் இருக்கும். ஆனால் பண பிரச்சனையில் கொஞ்சம் சிக்கிக் கொள்வீர்கள். கவலைப்படாதீங்க. உங்களுடைய உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். அடுத்தவர்கள் நம்பாதே, சுய புத்தியில் சிந்திப்பவர்கள் சீக்கிரம் ஜெய்க்கலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் மனதில் ஸ்ரீ ராம ஜெயம் சொல்லுங்கள் நல்லதே நடக்கும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மன நிம்மதி இருக்கும். இத்தனை நாள் கடந்து வந்த பிரச்சனைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவீர்கள். யாரிடமும் முன்கோபத்தை காட்டாதீங்க. உறவுகளை உதாசீனப்படுத்தாதீங்க. வேலையை செய்யும்போது கூட கொஞ்சம் கவனம் தேவை. குறிப்பாக கெமிக்கல் ஃபேக்ட்ரியில் வேலை செய்பவர்கள், மருந்து கம்பெனியில் வேலை செய்பவர்கள் எல்லாம் அவர்களுடைய வேலையில் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். காயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய விலை உயர்ந்த பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam