ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 31-10-2022 முதல் 6-11-2022 வரை

01 Nov 2022

 

 

இந்த வார ராசிபலன் 31-10-2022 முதல் 6-11-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. ஆழம் தெரியாமல் எதிலும் காலை வைக்கக்கூடாது. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கவனம் சிதறும் போது பெரிய பெரிய பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள். மாணவர்கள் படைப்பின் மீது மட்டும் அக்கறை காட்ட வேண்டும். நண்பர்களோடு கூட்டு சேர்ந்து தவறான பாதைக்கு செல்ல க்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். சொத்து சேர்க்கை இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். எதை செய்தாலும் யோசித்து செய்யுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் கொஞ்சம் குறைவாக இருக்கும். செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சுப விரய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சமாளிக்க முடியாது. இருப்பினும் வேறு வழி கிடையாது. அடுத்த மாத சம்பளம் வந்தாலும் அதை கடனுக்கு தான் கொடுக்க வேண்டி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். விஐபிகள் சந்திப்பு பெருமையை தேடித் தரும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வரும். வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். மற்றபடி எடுத்த காரியத்தில் வெற்றி தான். தினம்தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவைக்கு அதிகமாகவே வருமானம் கிடைக்கும். ஆனால் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பு தான் பிற்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். உங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கையை கொஞ்சம் உஷாராக பாருங்கள். சூதாட்டம் பந்தயம் போன்ற விஷயங்களின் பக்கம் செல்லாதீங்க. பேராசை பெரும்நஷ்டமாக முடிந்துவிடும். இந்த வாரம் அதாவது நவம்பர் 1ம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. நீங்கள் தொட்ட விஷயம் எல்லாம் வெற்றியடையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும், சம்பளமும் உயரும். ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு உண்டான அத்தனை பலனும் உங்கள் கைக்கு வந்து சேரும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆடம்பர செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் 2, 3 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. பொறுமை தேவை. தினம்தோறும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிரி தொல்லை அதிகமாக இருக்கும். உங்களை எப்போது கீழே விழுத்தலாம் என்று நாலு பேர், நான்கு திசையில் காத்துக் கொண்டே இருப்பார்கள். எதிலும் உஷாராக இருங்கள். பங்குதாரரை நம்பாதீங்க. யாரை நம்பியும் பெரிய முதலீட்டை போடாதீங்க. வேலை செய்யும் இடத்தில் கூட நம்பி எந்த விஷயத்தையும் யார்கிட்டயும் சொல்லாதீங்க. உங்களுடைய பொருட்களை நீங்களே பத்திரமாக பாதுகாத்து வையுங்கள். கூடவே இருந்து குழி பறிக்கும் கூட்டம் உங்களை சுற்றி உள்ளது. இதையெல்லாம் நீங்கள் தாண்டி வர வேண்டும். மற்றபடி பிரச்சினைகளை கண்டு உங்களுக்கு பயம் வரவே வராது. அதை இன்னும் வலிமையாக்க தினமும் நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம், எந்த காரணத்திற்காகவும் குறுக்கு வழியை யோசிக்கவே கூடாது. நீங்கள் நேர்மையாக தான் நடந்து கொள்ள வேண்டும். வேறு வழியே கிடையாது. குறுக்கு வழியில் செல்லலாம் என்று நினைத்தால் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை உங்களிடம் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். கூடுமானவரை பயணத்தை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது‌. தொழிலை விரிவு படுத்துவீர்கள். லாபம் அதிகரிக்கும். சில பேர் தங்களுக்கு வந்த நல்ல வாய்ப்பை கூட நழுவை விட்டு விடுவார்கள். தினம் தோறும் ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுவது நல்லது.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனம் அதிகம் தேவை. கொஞ்சம் பண விஷயங்களில் எல்லாம் எச்சரிகையாக இருங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. கடன் வாங்காதீங்க. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்தும் போடாதீங்க. நீங்கள் யாருக்காவது நல்லது செய்யப் போனால் கூட அது கெட்டதாக தான் போய் முடியும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை‌. அலட்சியப் போக்கில் ஏதாவது செய்யப் போக பிரச்சனையில் முடிந்து விடும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

விருச்சிகம்:

விருச்சக ராசி காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். எப்படி என்றால் நீங்கள் செய்யக்கூடிய வேலையை ஒருவர் பார்த்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார். நீங்கள் எப்படி தான் வேலை செய்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கப் போவது கிடையாது. ஆக இந்த வாரம் முழுவதும் சாதுரியமாக நடந்து கொள்ளுங்கள். வேகத்தை விட விவேகம் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். தொழிலில் சின்ன சின்ன பின்னடைவு ஏற்படும். சொன்ன நேரத்துக்கு கஸ்டமருருக்கு பொருளை டெலிவரி செய்ய முடியாது. சின்ன சின்ன வாக்குவாதம் உண்டாகும். குடும்பத்திலும் குழந்தைகளுக்கு பெற்றவர்களுக்கு சின்ன சின்ன மன சஞ்சலங்கள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. ஆக நிதானமாக இருங்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழிலில் தொடங்கலாம். புதிய வேலைக்கும் செல்லலாம். எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். பேக் பேலன்ஸ் உயரப் போகிறது. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆனால் யாருக்கும், யாரை நம்பியும் வாக்கு கொடுக்காதீங்க. அது நடக்கும் போது நடக்கட்டும் என்ற வார்த்தையை சொல்லி தப்பித்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆசைகள் நிறைவேற கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. புதிய வீடு வாங்குவது, புதிய நிலம் வாங்குவது, புதிய சைக்கிள் பைக் வண்டி வாகனம் இப்படி புதியதாக நீங்கள் எதை நினைத்தாலும் வாங்கலாம். அந்த யோகம் உங்களுக்கு இருக்கிறது. அதாவது ஏரோபிளேன் வாங்கணும்னு ஆசைப்படக்கூடாது. தகுதிக்கு ஏற்ற ஆசை நிறைவேறும். தொழிலை விரிவு செய்ய வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். உங்களுடைய பேச்சின் மூலம் நீங்கள் எதையுமே இந்த வாரம் சாதித்து விடலாம். வாக்கு சாதுரியம் இருக்கிறது அல்லவா, அது உங்கள் வாயில் தாண்டவம் ஆட போகிறது. பெரிய மனிதர்களின் சந்திப்பு பெரிய பெரிய நல்ல பலன்களை தேடி தரும். தினந்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப வருமானம் வந்து கொண்டே இருக்கும். எதையுமே பிளான் பண்ணாம பண்ணாதீங்க. கலை துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக அமையும். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் சண்டை போடக்கூடாது. வாக்குவாதம் செய்யக்கூடாது. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். கடன் தொல்லை படிப்படியாக குறையும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சலாக தான் இருக்கும். இருப்பினும் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றியைத் தரும். வருமானத்தில் பிரச்சனை இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த பிரச்சனை ஒரு மூன்று மாத காலங்களுக்கு இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் இந்த கஷ்டத்தை கடந்து போக வேண்டிய நிலைமை. புதிய நட்புகளை முழுமையாக நம்பாதீங்க. சொந்த விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கடவுளை நம்புங்கள். தினம் தோறும் அம்பாளுக்கு விளக்கு ஏற்றங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

மேஷம்: Aries zodiac sign மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. ஆழம் தெரியாமல் எதிலும் காலை வைக்கக்கூடாது. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். கவனம் சிதறும் போது பெரிய பெரிய பிரச்சனைகள் வருவதற்கு கூட வாய்ப்புகள். மாணவர்கள் படைப்பின் மீது மட்டும் அக்கறை காட்ட வேண்டும். நண்பர்களோடு கூட்டு சேர்ந்து தவறான பாதைக்கு செல்ல க்கூடிய வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். சொத்து சேர்க்கை இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். எதை செய்தாலும் யோசித்து செய்யுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும். ரிஷபம்: Taurus zodiac sign ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் கொஞ்சம் குறைவாக இருக்கும். செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சுப விரய செலவுகள் இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சமாளிக்க முடியாது. இருப்பினும் வேறு வழி கிடையாது. அடுத்த மாத சம்பளம் வந்தாலும் அதை கடனுக்கு தான் கொடுக்க வேண்டி இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். விஐபிகள் சந்திப்பு பெருமையை தேடித் தரும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டைகள் வரும். வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள். மற்றபடி எடுத்த காரியத்தில் வெற்றி தான். தினம்தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும். மிதுனம்: midhunam மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தேவைக்கு அதிகமாகவே வருமானம் கிடைக்கும். ஆனால் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பு தான் பிற்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். உங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கையை கொஞ்சம் உஷாராக பாருங்கள். சூதாட்டம் பந்தயம் போன்ற விஷயங்களின் பக்கம் செல்லாதீங்க. பேராசை பெருமஷ்டமாக முடிந்துவிடும். இந்த வாரம் அதாவது நவம்பர் 1ம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும். - Advertisement - கடகம்: Kadagam Rasi கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. நீங்கள் தொட்ட விஷயம் எல்லாம் வெற்றியடையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும், சம்பளமும் உயரும். ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கு உண்டான அத்தனை பலனும் உங்கள் கைக்கு வந்து சேரும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆடம்பர செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் 2, 3 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. பொறுமை தேவை. தினம்தோறும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும். சிம்மம்: simmam சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிரமமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிரி தொல்லை அதிகமாக இருக்கும். உங்களை எப்போது கீழே விழுத்தலாம் என்று நாலு பேர், நான்கு திசையில் காத்துக் கொண்டே இருப்பார்கள். எதிலும் உஷாராக இருங்கள். பங்குதாரரை நம்பாதீங்க. யாரை நம்பியும் பெரிய முதலீட்டை போடாதீங்க. வேலை செய்யும் இடத்தில் கூட நம்பி எந்த விஷயத்தையும் யார்கிட்டயும் சொல்லாதீங்க. உங்களுடைய பொருட்களை நீங்களே பத்திரமாக பாதுகாத்து வையுங்கள். கூடவே இருந்து குழி பறிக்கும் கூட்டம் உங்களை சுற்றி உள்ளது. இதையெல்லாம் நீங்கள் தாண்டி வர வேண்டும். மற்றபடி பிரச்சினைகளை கண்டு உங்களுக்கு பயம் வரவே வராது. அதை இன்னும் வலிமையாக்க தினமும் நரசிம்மர் வழிபாடு செய்யுங்கள். கன்னி: Kanni Rasi கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம், எந்த காரணத்திற்காகவும் குறுக்கு வழியை யோசிக்கவே கூடாது. நீங்கள் நேர்மையாக தான் நடந்து கொள்ள வேண்டும். வேறு வழியே கிடையாது. குறுக்கு வழியில் செல்லலாம் என்று நினைத்தால் நிறைய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை உங்களிடம் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். கூடுமானவரை பயணத்தை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது‌. தொழிலை விரிவு படுத்துவீர்கள். லாபம் அதிகரிக்கும். சில பேர் தங்களுக்கு வந்த நல்ல வாய்ப்பை கூட நழுவை விட்டு விடுவார்கள். தினம் தோறும் ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுவது நல்லது. - Advertisement - துலாம்: Thulam Rasi துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனம் அதிகம் தேவை. கொஞ்சம் பண விஷயங்களில் எல்லாம் எச்சரிகையாக இருங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. கடன் வாங்காதீங்க. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்தும் போடாதீங்க. நீங்கள் யாருக்காவது நல்லது செய்யப் போனால் கூட அது கெட்டதாக தான் போய் முடியும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை‌. அலட்சியப் போக்கில் ஏதாவது செய்யப் போக பிரச்சனையில் முடிந்து விடும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும். விருச்சிகம்: virichigam விருச்சக ராசி காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். எப்படி என்றால் நீங்கள் செய்யக்கூடிய வேலையை ஒருவர் பார்த்து குறை சொல்லிக் கொண்டே இருப்பார். நீங்கள் எப்படி தான் வேலை செய்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கப் போவது கிடையாது. ஆக இந்த வாரம் முழுவதும் சாதுரியமாக நடந்து கொள்ளுங்கள். வேகத்தை விட விவேகம் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். தொழிலில் சின்ன சின்ன பின்னடைவு ஏற்படும். சொன்ன நேரத்துக்கு கஸ்டமருருக்கு பொருளை டெலிவரி செய்ய முடியாது. சின்ன சின்ன வாக்குவாதம் உண்டாகும். குடும்பத்திலும் குழந்தைகளுக்கு பெற்றவர்களுக்கு சின்ன சின்ன மன சஞ்சலங்கள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. ஆக நிதானமாக இருங்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும். தனுசு: Dhanusu Rasi தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கிறது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழிலில் தொடங்கலாம். புதிய வேலைக்கும் செல்லலாம். எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். பேக் பேலன்ஸ் உயரப் போகிறது. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆனால் யாருக்கும், யாரை நம்பியும் வாக்கு கொடுக்காதீங்க. அது நடக்கும் போது நடக்கட்டும் என்ற வார்த்தையை சொல்லி தப்பித்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும். மகரம்: Magaram rasi மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆசைகள் நிறைவேற கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. புதிய வீடு வாங்குவது, புதிய நிலம் வாங்குவது, புதிய சைக்கிள் பைக் வண்டி வாகனம் இப்படி புதியதாக நீங்கள் எதை நினைத்தாலும் வாங்கலாம். அந்த யோகம் உங்களுக்கு இருக்கிறது. அதாவது ஏரோபிளேன் வாங்கணும்னு ஆசைப்படக்கூடாது. தகுதிக்கு ஏற்ற ஆசை நிறைவேறும். தொழிலை விரிவு செய்ய வங்கி கடன் சுலபமாக கிடைக்கும். உங்களுடைய பேச்சின் மூலம் நீங்கள் எதையுமே இந்த வாரம் சாதித்து விடலாம். வாக்கு சாதுரியம் இருக்கிறது அல்லவா, அது உங்கள் வாயில் தாண்டவம் ஆட போகிறது. பெரிய மனிதர்களின் சந்திப்பு பெரிய பெரிய நல்ல பலன்களை தேடி தரும். தினந்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும். கும்பம்: Kumbam Rasi கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப வருமானம் வந்து கொண்டே இருக்கும். எதையுமே பிளான் பண்ணாம பண்ணாதீங்க. கலை துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக அமையும். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் சண்டை போடக்கூடாது. வாக்குவாதம் செய்யக்கூடாது. விட்டுக்கொடுத்து செல்லுங்கள். கடன் தொல்லை படிப்படியாக குறையும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும். மீனம்: meenam மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சலாக தான் இருக்கும். இருப்பினும் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றியைத் தரும். வருமானத்தில் பிரச்சனை இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த பிரச்சனை ஒரு மூன்று மாத காலங்களுக்கு இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் இந்த கஷ்டத்தை கடந்து போக வேண்டிய நிலைமை. புதிய நட்புகளை முழுமையாக நம்பாதீங்க. சொந்த விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கடவுளை நம்புங்கள். தினம் தோறும் அம்பாளுக்கு விளக்கு ஏற்றங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam