ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 27-06-2022 முதல் 03-07-2022 வரை

29 Jun 2022

இந்த வார ராசிபலன் 27-06-2022 முதல் 03-07-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

 

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் படு வேகமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் ஒரு வேலையை தொட்டால் அதில் நிச்சயம் வெற்றி காண்பீர்கள். அந்த அளவிற்கு விடாமுயற்சியோடு, தன்னம்பிக்கையோடு சுறுசுறுப்போடு, செயல்பட்டுக் வெற்றிவாகை சூட போகும் வாரம் தான் இது. புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் கிடைக்கும். ஆனால் யாரை நம்பியும் யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. மூன்றாவது மனிதர்களின் பிரச்சனைகளில் தலையிட்டால் அவமானத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தினம்தோறும் வாராகி வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வார்த்தையில் நிதானம் தேவை. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசாதீர்கள். சில இடங்களில் எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து தான் பேச வேண்டும். வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. உறவுகளுக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். வங்கி கடன் கிடைக்கும். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. தேவையில்லாத பிரச்சினைகள் வீடு தேடி வரும். உங்களுக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களுக்குக் கூட நீங்கள் கெட்ட பெயர் எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். பொறுமை காக்கத்தான் வேண்டும். காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும். திருமண பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். வரன் பார்ப்பதாக இருந்தால் கொஞ்சம் நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பெரிய அளவில் முயற்சி எடுத்தால்தான் வியாபாரத்தில் சிறிய அளவு லாபத்தை பார்க்க முடியும். உடல்நிலை சரி இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினமும் காலையில் எழுந்து ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்து சிவன் வழிபாடு செய்வது நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கரடுமுரடான வாரமாக தான் இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாராவது உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் தொடங்கும். யாரை நம்பியும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். எதிர்பாலின நட்பில் கவனமாக இருக்க வேண்டும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். எதிர்பாராத ஏமாற்றங்கள் வருவதால் மன கஷ்டம் இருக்கும். கவலை வேண்டாம். அனுமன் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்க போகின்றது. செய்யும் வேலையில் அக்கறை அதிகரிக்கும். நிறைய லாபம் கிடைப்பதற்கு புதிய யுக்திகளை தொழிலில் அறிமுகம் செய்வீர்கள். போட்டி பொறாமை கொண்ட இந்த உலகத்தில் உங்களுக்கு இந்த வாரம் நிறைய புது அனுபவங்கள் கிடைக்கப் போகின்றது. பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு பெருமை சேரும். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் வந்து போகும். கூட இருப்பவர்கள் பின்னால் குழி தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். வருமானத்தில் சில சிக்கல்கள் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான பேச்சாற்றல் இருக்கும். எல்லா விஷயத்தையும் சாதுரியமாக பேசியே சாதிக்க போறீங்க. நீங்கள் சொல்லும் விஷயத்திற்கு யாராலும் மறுத்து தலையாட்ட முடியாது. அந்த அளவிற்கு வாக்குவன்மை அதிகரிக்கும். முகப்பொலிவு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பாராட்டு புகழ் தேடி வரும். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வரன் அமையும். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்த பந்தங்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். நீண்ட தூர பயணத்தில் அலைச்சல் ஏற்படும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. கேட்காமலேயே கஷ்டப்படுபவர்களுக்கு உதவி கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். இதனால் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு கடன் கடன் வாங்கினால், கடனை திருப்பிக் கொடுப்பதில் சில சிக்கல்கள் ஏற்படும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பவர்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம். அரசு சம்மந்தப்பட்ட விவகாரங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. நடக்கவே நடக்காது என்ற நல்ல காரியங்கள் எல்லாம் தானாக நடக்கும். யாராவது ஒருவர் தெய்வம் போல இறங்கி வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். அந்த சமயத்தில் மன தைரியம் அதிகரிக்கும். எதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று துணிந்து சாதிக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு நிறைய நல்லது நடக்கப் போகின்றது. குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு குடும்பத்தில் மேலும் சந்தோஷத்தை கொடுக்கும்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் இருந்த விரிசல்கள் சரியாகும். உறவுகள் ஒன்று கூடும். சுபச்செலவுகள் ஏற்படும். சொந்தத் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். குறிப்பாக இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு. கணினி சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்பவர்களுக்கு எதிர்பாராத நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய பொருட்களை மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். சில பொருட்கள் திருடு போகலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விரும்பிய படிப்பை படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமைதி, கட்டாயம் தேவை. யாரைப்பற்றியும் பின்னாடி பேசாதீங்க. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை கிடையாது. அனாவசியமாக அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிட்டால், பிரச்சனை உங்கள் தலை மேல் வந்து விழும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உங்களுடைய கவனக்குறைவு உங்களுக்கு சில பிரச்சனைகளை கொண்டுவரும். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் உஷாராக இருங்கள். உங்களுடைய அலட்சியம் நிறைய வாய்ப்புகளை தவற விடுவீங்க. பின்பு வருத்தப்பட்டு பிரயோசனமில்லை. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது பலனைக் கொடுக்காது. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசான மனவருத்தம் இருக்கும். உங்களுக்கு பிடித்த நபரை விட்டு பிரிந்து தூரம் செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் வரலாம் வேலை. வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சொந்த தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பிரச்சினைகள் என்று வந்தாலும் உங்களுடைய பேச்சு திறமையால் அதை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நெகட்டிவ் திங்கிங் தூக்கத்தை கெடுக்கும். மற்றபடி பிரச்சனைகள் பெரியதாக வருவதற்கு வாய்ப்பு இல்லை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வாழ்க்கைத்துணை உங்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொள்வார்கள். சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்பு கிடையாது. சொந்தமாக நிலம் வீடு வாங்குவதற்கு வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக நடைபெற வேண்டும் என்று சொன்ன நல்ல காரியத்தை இந்த வாரம் நடத்தி முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில குழப்பங்கள் வரும். புதிய வேலைக்கு போகலாமா. இந்த வேலையிலேயே இருக்கலாமா. என்ன செய்வது என்று. குழம்புவீர்கள், கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த வார இறுதிக்குள் எல்லா பிரச்சனையும் சரியாகிவிடும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam