ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 26-9-2022 முதல் 2-10-2022 வரை

26 Sep 2022

 

 

 

இந்த வார ராசிபலன் 26-9-2022 முதல் 2-10-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கும் செலவுக்கும் சரியான கணக்கு இருக்கும். பத்து ரூபாயை கூட சேமிப்பதற்கான வழி இருக்காது. வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபகாரிய செலவுகளும் ஒரு பக்கம் கையை கடிக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கின்றது. வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி உண்டு. சொந்தத்தொழிலில் நினைத்தபடி லாபம் வராது. கொஞ்சம் கடினமான உழைப்பை போட வேண்டியதாக இருக்கும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும். இந்த மாதம் 30, அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பார்க்காத நல்ல செய்தி மன மகிழ்ச்சியை கொடுக்கும். மனக்கவலை நீங்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வீட்டில் இருப்பவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். சில பேருக்கு தேவையற்ற மருத்துவ செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரம் எப்போதும் போல சுமூகமாக நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தினம்தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்லது கூட வாசல் கதவை தட்டும். வருமானம் அதிகரிக்கும். பண பிரச்சனை இருக்காது. ஆனால் குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். குடும்ப விஷயத்தை அனாவசியமாக அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் சொல்ல வேண்டாம். எதிர்பாலின நட்பு பிரச்சனையை கொடுக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் பெரியதாக பிரச்சனை இருக்காது. உங்கள் வேலையில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனக்கவலை படிப்படியாக குறையும். ஆன்லைன் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் பார்ட்னரிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் அதிக முதலீட்டை போட வேண்டாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. எதிலும் பொறுமை இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிரமங்கள் இருக்கும். எந்த ஒரு வேலையையும் எடுத்தவுடன் முடிக்க முடியாது. மன உளைச்சல் இருக்கும். உடல் அலைச்சல் இருக்கும். உங்களுடைய பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். எதிரிகளை துவம்சம் செய்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட சிலருக்கு வரலாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும். பெரியோர்களின் ஆலோசனை இல்லாமல் எதுவும் செய்யாதீங்க. தினம் தோறும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை சொல்லுவது நல்லது.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. முன்கோபத்தை காட்டவே கூடாது. சண்டை சச்சரவு என்று வந்தால் கூட, நீங்கள் அமைதியாக தான் இருக்க வேண்டும். முன்கோபம் உங்களுடைய முன்னேற்றத்தை அழித்துவிடும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எதையுமே சரியாக பிளான் பண்ணி பண்ணனும். இல்லையென்றால் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். இந்த வாரம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நிறையவே இருக்கின்றது. அனுபவ ரீதியாக சில விஷயங்களை உணர்ந்து வாழ்க்கையை நன்றாக புரிந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் வேலை வலு அதிகரிக்கும். நிறைய திட்டு வாங்க போறீங்க. ஆனாலும் பொறுமையாக தான் இருக்க வேண்டும். கடன் பிரச்சனை வேறு ஒரு பக்கம் கழுத்தை நெரிக்கும். தினம்தோறும் குலதெய்வத்தை வழிபாடு செய்து விட்டு அன்றாட வேலையை தொடங்கவும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். வந்த வருமானம் கூட சில பேருக்கு வராது. செலவுக்கு என்ன செய்வது என்று திண்டாடுவீர்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில பேர் அதிக வட்டிக்கு கூட வேறு வழி இல்லாமல் கைநீட்டி கடனை வாங்கி விடுவார்கள். மற்றபடி சந்தோஷத்துக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. தொழிலில் சின்ன சின்ன எதிர்ப்புகள் வரும். வியாபாரத்தில் சின்ன சின்ன சங்கடங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வரவுக்கு மீறிய செலவும் கடன் பிரச்சனையும் உங்களை கொஞ்சம் சிரமப்படத் தான் செய்யும். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். இந்த வாரம் வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நரசிம்மர் வழிபாடு கை கொடுக்கும்.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் லாபகரமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிதான். கோர்ட்டில் நடக்கும் கேஸ் வழக்குகள் கூட உங்களுக்கு சாதகமாக அமையும். பூர்வீக சொத்துகள் உங்கள் கையை வந்து சேரும். சொத்து சேர்க்கை இருக்கும். வருமானம் அதிகரிக்கும் ஆனால். மூன்றாவது நபரை நம்பாதீங்க. கூடவே இருப்பாங்க ஆனா உங்களுக்கு பின்னாடி குழி தோண்டுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. சில இடங்களில் தேவையில்லாத பஞ்சாயத்துகளை செய்து கெட்ட பெயரை வாங்கிக் கொள்வீர்கள். அவமானத்தை சுமக்க கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். யாரையும் அதிகமா நம்பாதீங்க. எந்த உறவாக இருந்தாலும் லிமிட்டா இருக்கட்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கப் போகின்றது. நிறைவேறாத உங்களுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத நன்மை நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சந்தோஷம் இருக்கும். மனநிம்மதி இருக்கும். விக்கல் பிடுங்கள் போன்ற பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. ஒரு சந்தோஷம் வரும். அதற்கு பின்னாடியே ஒரு கஷ்டமும் வந்து நிற்கும். சரிசமமாக இருக்கும். இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. ஆகவே இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக நகர்த்திச் செல்லுங்கள். உங்களுடைய வேலையை நீங்கள் செய்தால் போதும். அடுத்தவர்களுடைய விஷயத்தில் தடையிடாதிங்க. வீதியில் இரண்டு பேர் அடித்துக் கொண்டு இருந்தால் அவர்களை விளக்க சென்றால் கூட, பிரச்சினை உங்கள் பக்கம் திரும்பி விடும் ஜாக்கிரதை. உறவுகளோடு ரொம்பவும் கவனமாக பேச வேண்டும். சில வார்த்தைகள் பிரச்சனையை பெரிதாக்கிவிடும். கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்க போகின்றது. கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வருமானம் அதிகரிக்கும். ஆனால் நீங்கள் எந்த விஷயத்தையும் அலட்சியமாக செய்யக்கூடாது. கவன குறைவு சில கஷ்டங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். எதிரிகளின் முன்பு தலை நிமிர்ந்து வாழ்க்கையை நடத்துவீர்கள். வேலை செய்யும் இடத்தில் சுறுசுறுப்பாக பம்பரமாக சுற்றி எல்லா வேலையையும் முடித்து பாராட்டையும் பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். குழந்தை வரம் வேண்டி காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களுடைய நம்பிக்கை, வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுக்க வேண்டும். வீண் வம்புக்கு போகாதீங்க. உங்க வேலையில் கவனமாக இருங்க. எதுவாக இருந்தாலும் விடா முயற்சி செய்ய வேண்டும். அதன் மூலம் மட்டும் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. அனாவசிய செலவு வரும். ஆனால் நீங்கள் தான் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அலைச்சல் சங்கடங்களை உண்டு பண்ணும். சில பேருக்கு வீண்விரயம் உண்டாகும். பொறுமையாக இருந்தால் தான் சாதிக்க முடியும். நிதானத்தை இழந்தவர்கள் நிச்சயம், நல்ல வாழ்க்கையையும் இழந்து விடுவீர்கள். இந்த வாரம் 26, 27, 28 உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது சாக்கிரதை.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam