ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 21-11-2022 முதல் 27-11-2022 வரை

22 Nov 2022

 

 

 

இந்த வார ராசிபலன் 21-11-2022 முதல் 27-11-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாகை சுடக்கூடிய வாரமாக அமையப் போகின்றது. உங்களுடைய முயற்சிகளுக்கு எத்தனை தடை வந்தாலும் அதை தாண்டி உங்களுடைய பயணம் தொடரும். நீண்ட நாள் ஆசை கனவு லட்சியம் எல்லாம் நிறைவேற போகின்ற வாரம் இது. ஆனால் செலவை மட்டும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். கையிருப்பு கரைந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மன நிம்மதி இருக்கும். சொந்த தொழில் சுமுகமாக செல்லும். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வரும். விட்டு கொடுத்து செல்லுங்கள். இந்த வாரம் 22, 23 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை, தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் மகிழ்ச்சியான சுப காரியம் நிகழ்ச்சிகள் நடக்கும். கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் பலு இருக்கும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உடனடியாக மருத்துவரை அணுகவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எல்லா விஷயமும் உங்களுக்கு சாதகமாக நடந்தாலும், சில விஷயங்களில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். அதாவது பண சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் உஷார். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. அதே அளவிற்கு நேர் வழியில் நீங்கள் செல்ல வேண்டும். ஏதாவது ஒரு விஷயம் நடப்பதற்காக குறுக்கு வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. அது இறுதியில் ஆபத்தை கொடுத்து விடும். கஷ்டம் வந்தாலும் சரி, சண்டை வந்தாலும் சரி, உங்கள் வேலையே போகக்கூடிய சூழ்நிலை வந்தாலும் சரி, உண்மையை சொல்லி பழகுங்கள். அப்போதுதான் எதிர்காலம் நன்றாக இருக்கும். சில நேரங்களில் கோர்ட் கேஸ் வழக்குகள் செல்லும் அளவிற்கு கூட விபரீத பிரச்சனைகள் உண்டாகலாம். ஜாக்கிரதை மற்றபடி புதிய வீடு வாகனம் வாங்கக் கூடிய யோகம் இருக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் கொடுக்கக் கூடிய வாரமாகத்தான் அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எந்த பிரச்சனையும் வராது. சொந்த தொழிலில் சில ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சொந்த பந்தங்களுக்கிடையே சில சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே வாக்குவாதத்தில் ஈடுபடாதீங்க. பதவி உயர்வு கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய நல்ல காரியம் நாலு பேரின் வாழ்த்தை பெற்றுத்தரும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் உயரும். நான்கு பேரை வைத்து பஞ்சாயத்து செய்யும் அளவிற்கு உங்களுடைய வாக்கு வன்மை அதிகரிக்கப் போகிறது.என்றால் பாருங்களேன். நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் அது திரு வார்த்தையாக இருக்கும். சரியாக சில விஷயங்களில் முடிவெடுத்து நாட்டாமை பட்டத்தை பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. ஆனால் வீட்டில் சின்ன சின்ன சண்டைகள் வரும். சுப காரியத்தில் தடை இருக்கும். கவலைப்படாதீங்க வரும் சில நாட்களில் அந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும். மன கஷ்டம் இருக்கும். அந்த நேரத்தில் மனதை அமைதி படுத்த ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுங்கள்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. அவசரப்பட்டு யாரையும் தகாத வார்த்தை சொல்லி திட்டி விடாதீர்கள். வார்த்தையை கொட்டினால் திரும்பவும் பெற முடியாது. நிதானம் அவசியம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். வீண் விரையும் உண்டாகும். மன குழப்பம் இருக்கும். இந்த நேரத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என்றால் பொறுமையாக சிந்திப்பது தான் நல்லது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும்‌. பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். முன் கோபத்தை குறைத்துக் கொண்டால் இந்த வாரம் தப்பிச்சீங்க. ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க. தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். வேலை காரணமாக வெளியிடங்களுக்கு சென்று வரவேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் நலம் பாதிக்கும். ஆரோக்கியமான உணவை நேரத்திற்கு எடுத்துக்கோங்க. குடும்ப தகராறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக பங்காளிகளின் சண்டை மூலம் குடும்பம் இரண்டாக பிரிவதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் கொடுக்கக் கூடிய வாரம் இது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் வரும். எதிரிகளையும் நண்பர்களாக மாற்றி சில விஷயங்களை சாதிப்பீர்கள். புதியதாக வண்டி வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கின்றது. தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

 

விருச்சிகம்:

விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் போராட்டமான வாரமாகத் தான் இருக்கின்றது. நன்மை சில நடந்தாலும், தீமை பல உங்களை பின் தொடரும். கவலைப்படாதீங்க. எப்போதுமே நாம் அனுபவிக்க கூடிய கஷ்டத்திற்கு பின்பு நல்ல நேரம் காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். சுப காரிய நிகழ்ச்சிகளில் தடை உண்டாகும். நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள கொஞ்சம் காலம் நீட்டிக்கும். நல்ல பெயர் வாங்குவதில் சிரமம் இருக்கும். நீங்கள் செய்த வேலைக்கும் நல்ல பெயரை அடுத்தவர்கள் தட்டிச் செல்வார்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் சாதகமாக முடியக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டிற்கு போகக்கூடிய ஆசை நிறைவேறும். சொந்தத் தொழில் விரிவடையும். கடன் குறையும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனம் தேவை. யாருடைய பேச்சை கேட்டும் வேலைகளை செய்யக்கூடாது. சுய புத்தி ரொம்ப ரொம்ப முக்கியம். கையில் பணம் தண்ணீர் போல கரையும். சேமிப்பு குறையும். நிறைய போராட்டங்களை எதிர்கொள்ளப் போகிறீர்கள்‌. இறுதியில் ஆனால் வெற்றி வாகை சூடப் போவது என்னமோ நீங்கதான். வீட்டில் குழந்தை செல்வம் தவழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருமண பேச்சு வார்த்தை கை கூடி வரும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். சொந்த தொழிலை விரிவு படுத்த கடன் கிடைக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் தொட்டதெல்லாம் உங்களுக்கு வெற்றி தான். வருமானம் இரட்டிப்பாக உயரும். சேமிப்பு பல மடங்கு உயரும். வியாபாரத்தில் கொடி கட்டி பறக்க போகிறீர்கள். குறிப்பாக இரும்பு கம்பி, கற்கள் மணல் வியாபாரிகளுக்கு அமோக வரவேற்பு இருக்கின்றது. வாழ்க்கையில் இப்படி ஒரு புகழாரத்தை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு நல்ல பெயர் கிடைக்கப் போகின்றது. ஆனால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அரசாங்க அதிகாரிகளை எதிர்த்து கொள்ள வேண்டாம். தினம் தோறும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பெருமை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. குறிப்பாக விளையாட்டுத் துறையில் இருப்பவர்கள், மருத்துவத்துறையில் இருப்பவர்கள், பிறகு சமூக சேவையில் இருப்பவர்கள், என்று அவரவருடைய துறையில் சாதனை புரியக்கூடிய சந்தர்ப்பங்களை இந்த வாரம் உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் கௌரவத்தை மரியாதைப்படுத்தும் வகையில் விருதுகள் கூட உங்களுக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் இருந்த ஏற்ற இறக்கங்கள் எல்லாம் சரியாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. இத்தனை நாள் இருந்து வந்த பண கஷ்டம் இனி படிப்படியாக குறையும். கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். அவசரப்பட்டு முடிவுகளை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டாம். அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கின்றது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போலவே ஒரு மன சங்கடமும் ஆழ்மனதில் இருக்கும். ஆனால் எல்லாம் சரியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். யாரை நம்மையும் கடன் கொடுக்காதீங்க. கடன் வாங்காதீங்க. தினம்தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam