ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 18-07-2022 முதல் 24-07-2022 வரை

19 Jul 2022

 

 

 

 

 

இந்த வார ராசிபலன் 18-07-2022 முதல் 24-07-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். மனதை அலைபாய விடக்கூடாது. இதை வாங்க வேண்டும் அதை வாங்க வேண்டும் என்ற எண்ணம் வரவே கூடாது. செலவை உங்கள் கட்டுப்பாட்டிற்கு வைக்க வேண்டும். வருமானத்தில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அப்படி இப்படி என்று இந்த வாரத்தை கடத்துவது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். இருப்பினும் சந்தோஷத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பிரச்சனைகளை சமாளிக்க உறவுகளும் நண்பர்களும் கை கொடுப்பார்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. எப்போதுடா இந்த பிரச்சனை எல்லாம் சரியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா, அந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒவ்வொன்றாக தீர்வு கிடைத்துவிடும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் எதிர்பாராத நன்மைகள் காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் இவ்வளவு சந்தோஷத்தில் உடல் ஆரோக்கியத்தை கவனிக்க மறக்க வேண்டாம். வேலைக்கு சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் காட்டுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். எதிரி தொல்லையில் இருந்து விடுபடலாம். தினம்தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அறிவாற்றல் வெளிப்படக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எவ்வளவு பெரிய கஷ்டமான சூழ்நிலையாக இருந்தாலும் அதிலிருந்து சுலபமாக வெளிவந்து விடுவீர்கள். சிக்கலில் சிக்கிவிட நிறைய ஆட்கள் பின்னாடி காத்துக் கொண்டிருப்பார்கள். எக்காரணத்தைக் கொண்டும் அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விடாதீர்கள்‌. நிதானமாக தான் எதிரிகளை சமாளிக்க வேண்டும். வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் வேலையில் கொஞ்சம் அதிக அக்கறை காட்ட வேண்டியதாக இருக்கும். யாரையும் நம்பி பண பரிமாற்றத்தில் ஈடுபட வேண்டாம். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் உறவுகளுக்கிடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். இந்த மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. வருமானத்தில் பிரச்சனை இருக்கும். செலவு செய்வதற்காக பணம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். சேமிப்பு கரையும். சொந்த தொழிலை விரிவு படுத்துவதற்கு தேவையான வங்கி கடன் கிடைக்கும். இருந்தாலும் ஏதோ ஒரு சிக்கலின் காரணமாக புதிய முயற்சிகள் தடைபட்டுக் கொண்டே வரும்‌. பெண்கள் சமையலறையில் காய்கறி நறுக்கும்போது அடுப்பில் வேலை செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் வீண் விவாதம் வேண்டாம்‌. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வார்த்தையில் பொறுமை தேவை. தினம் தோறும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றி தரும். நினைத்ததை சாதிப்பீர்கள். சொந்த தொழிலில் பங்குதாரருடன் ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். புதிய காண்ட்ராக்டில் கையொப்பம் போடும்போது ஒன்றுக்கு பலமுறை படித்து கையெழுத்து போட வேண்டும்‌. சில விஷயங்களை சின்ன சின்ன ஏமாற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் தொடங்கும். ஆடி முடிந்ததும் கெட்டிமேல சத்தம் கேட்கும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபட்டு இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். இந்த மாதம் 21ஆம் தேதி சந்திராஷ்டமம் உள்ளது‌. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு காரியத்தையும் அடம்பிடித்து சாதிக்க வேண்டும் என்று செய்யாதீங்க. அது உங்களுக்கு பாதகமாக முடிந்துவிடும். பெரியவர்களின் ஆலோசனையோடு நடந்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். செய்யும் தொழிலில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு எதிராக மாறும். பெரியதாக எந்த முதலிடம் செய்ய வேண்டாம். யாரையும் நம்பியும் கையில் இருக்கும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். எல்லா விஷயங்களிலும் உஷாராக இருங்கள். வெளிநாட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். ஏதோ ஒரு சோகம் மனதை தொற்றிக் கொண்டுதான் இருக்கும். காலையில் எழுந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்யுங்கள் நல்லது நடக்கும்.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோம்பலான வாரமாக இருக்கும். சின்ன வேலையை செய்தாலும் அசந்து போய் உட்கார்ந்து விடுவீர்கள். அடுத்த வேலையை செய்வதற்கு மனம் போகாது. இதனாலேயே பல பிரச்சனைகள் உண்டாகும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடங்குவது பற்றி பேச்சு பார்த்தேன் நடக்கும். வேலை காரணமாக நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. நடக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்த ஏதோ ஒரு காரியம் நடக்காமல் போவதால் மனதில் சின்ன ஏமாற்றம் இருக்கும். எதையோ இழந்தது போல யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தோடு முடிந்தால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மன நிம்மதியை தரும்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமையில் பிரச்சனை இருக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். சிலருக்கு வட்டி கூட கட்ட முடியாத சூழ்நிலை வரும். என்ன செய்வது இது உங்களுக்கு விரைய நேரம். கொஞ்சம் சமாளித்து தான் ஆக வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்கோபத்தை வெளியே காட்டாதீர்கள். சண்டை என்று வந்தால் அனுசரித்து செல்வது நல்லது. நிலையாக நின்று ஒரு முடிவை எடுக்க முடியாத சூழ்நிலை நிலவும்‌. மனக்கவலை இருக்கும். இரவில் படுத்தால் நிம்மதியான தூக்கம் இருக்காது. தினம் தோறும் நரசிம்மரை வழிபாடு செய்வது மனதிற்கு தைரியத்தை கொடுக்கும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சில முடிவுகளை துணிந்து எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். யோசித்து நின்று நிதானமாக முடிவு எடுங்கள். அவசரப்பட்டு தவறான முடிவு எடுக்க வேண்டாம். இந்த வேலைக்கு செல்வதா, அந்த வேலைக்கு செல்வதா என்ற குழப்பம் உண்டாகும். குழப்பத்தை தெளிவு படுத்துவதற்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். இந்த வார இறுதிக்குள் பிரச்சனைக்கு எல்லாம் நல்ல தீர்வு கிடைத்துவிடும். பயம் வேண்டாம். எந்த பிரச்சனையையும் கண்டு அஞ்சு பயந்து உட்காராதீங்க. உங்களுடைய முயற்சிகளை நீங்கள் செய்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் உங்கள் பக்கம் நிற்கும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன மகிழ்ச்சியான வாரமாக தான் இருக்கப் போகின்றது. சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட உங்களுக்கு சாதகமாக வந்து நின்று பேசுவார்கள். நன்மைகள் ஒவ்வொன்றாக நடக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கும். வாழ்க்கைத் துணையின் பிரிவால் மன கஷ்டம் ஏற்படும். இந்த பிரிவு நிரந்தரமானது அல்ல. சீக்கிரம் சரியாகிவிடும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடலாம். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்க. ஹெல்மெட் போட்டுக்கோங்க. சீட் பெல்ட் போட்டுக்கோங்க. உடல் அசதி ஏற்படும். சத்தான ஆகாரங்களை சாப்பிடுவது நல்லது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அலைச்சலான வாரமாக தான் இருக்கப்போகிறது. எந்த வேலையை கையில் எடுத்தாலும் அது சீக்கிரம் முடியாது. வேலை செய்யும் இடத்தில் வேலை பளு தலைக்கும் மேலே இருக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல், நேரத்திற்கு தூங்க முடியாமல், நேரத்திற்கு வீட்டிற்கு வராமல், சிரமப்படுவீர்கள். பிரச்சனை பெரியதாக இருந்தாலும் உங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். உங்கள் மேல் எந்த தவறும் வராது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனைவி உங்களுடைய நிலைமையை புரிந்து நடந்து கொள்வார்கள். சொத்து சுகம் வாங்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் இழுபறியாக இருக்கும். உங்களுடைய மாமியார் வீடு சம்பந்தப்பட்ட உறவுகளுக்கிடையே கொஞ்சம் கவனம் தேவை. ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி. தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam