ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 17-10-2022 முதல் 23-10-2022 வரை

20 Oct 2022

இந்த வார ராசிபலன் 17-10-2022 முதல் 23-10-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

 

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் தொழிலில் எந்த பிரச்சனையும் இருக்காது. அப்படியே சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்துக் கொள்வீர்கள். அந்த அளவிற்கு மன தைரியம் உங்களிடத்தில் இருக்கும். பண்டிகை நாட்களை கொண்டாடுவதற்கு தேவையான அத்தனை வேலைகளும் சுறுசுறுப்பாக நல்ல படியாக நடந்து முடியும். கையில் பணம் இல்லாதது போல இருந்தாலும், கடைசி சமயத்தில் வந்து உங்களை காப்பாற்றி விடும். சொந்த பந்தங்களுடன் வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக செலவழிக்க போகிறீர்கள். கடன் தொல்லை குறையும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத் தான் இருக்கின்றது. சின்ன சின்ன குடும்ப பிரச்சனை, மன நிம்மதியை குறைத்து விடும். அதேசமயம் பணம் சம்பந்த பரிமாற்றங்களில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சொந்த தொழிலில் நிறைய காசு போடாதீங்க. யார் சொல்வதை நம்பியும் தெரியாத விஷயங்களில் காலை விடாதீர்கள். ரொம்பவும் நெருங்கிய நண்பராக இருந்தாலும், அவரிடம் உஷாராக நடந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். இருந்தாலும் அடுத்த வாரம் உங்களுக்கு பண்டிகை சந்தோஷமாக பிறக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். பண்டிகை தினம் என்றாலே புத்தாடை வாங்குவது, இனிப்பு பலகாரம் வாங்குவது, பட்டாசு வாங்குவது என்ற செலவுகள் இருக்கும். இருப்பினும் உங்களுக்கு அதைவிட அதிகமாக சுப செலவு வர காத்துக் கொண்டிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வேலை பளு அதிகமாக இருக்கும். கல்யாணம் கை கூடி வரும். வாழ்க்கை துணை சொல்வதை செவி கொடுத்து கேட்டால், பிரச்சனைகள் குறையும். தினம் தோறும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களை இந்த வாரம் எல்லோருக்கும் பிடிக்க போகிறது. நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் அடுத்தவர்களுக்கு அத்தனை நன்மைகளை கொடுக்கும். அடுத்தவர்களை புரிந்து மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். செலவு கொஞ்சம் கையை கடிக்கும். என்ன செய்வது. பண்டிகை நாட்கள் அல்லவா. கணவன் மனைவிக்குள் சந்தோஷம் அதிகரிக்கும். கடன் தொல்லை படிப்படியாக குறையும். சந்தோஷமாக வரக்கூடிய தீபாவளியை கொண்டாட போறீங்க. உங்களால் முடிந்தால் இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இன்னும் சந்தோஷம் கிடைக்கும். தினம் தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். எந்த வேலையை முன் செய்வது, எந்த வேலையை பின் செய்வது என்று தெரியாமல் கொஞ்சம் குழப்பம் அடைவீர்கள். இருப்பினும் இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் பாடகர்கள் இவர்களுக்கு புகழைத் தேடித் தரக்கூடிய வாரம் இது. நட்பு வட்டாரத்தில் கொஞ்சம் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களிடம் நெருங்கி பழக வேண்டாம். பங்காளிகள் சண்டை முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் நன்மை நடக்கும். ஆனால் அதற்கு கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும். விடாமுயற்சியின் மூலமாகத்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒரு வேலையை ஒரு முறை முயற்சி செய்து விட்டு, அதை கைவிடாதிங்க. பலமுறை முயன்ற பின்பு உங்களுக்கு பெரிய நல்லது காத்துக் கொண்டிருக்கின்றது. மற்றபடி கோர்ட் கேஸ் வழக்குகள், உங்களுக்கு சாதகமாக இருக்கும். சொத்து வாங்குவதற்கு நல்ல நேரம் இது. பேச்சு திறமையின் மூலம் பாராட்டுக்கள் குவியும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். எதிர்காலத்திற்கு நல்லது. தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மனசு கஷ்டமாக இருக்கும். யாரும் உங்களுடைய சொல் பேச்சை கேட்க மாட்டார்கள். மனைவி குழந்தைகள் எல்லோரும் நீங்கள் சொல்வதற்கு எதிராகத்தான் பேசுவார்கள். கொஞ்சம் கோபம் வரும். அடங்கிக் கொள்ளுங்கள். வேறு வழி கிடையாது. பேசக்கூடிய இடத்தில் நீங்கள் இல்லை. கேட்கக்கூடிய இடத்தில் தான் இந்த வாரம் நீங்க இருக்க போறீங்க. பகையை உண்டாக்க வேண்டாம். எல்லோரிடமும் கொஞ்சம் சகஜமாக பழகுங்கள். தினம் தோறும் காலையில் ஐந்து நிமிடம் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்யுங்கள்.

 

விருச்சிகம்:

விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நன்மையும் நடக்கும், சில கஷ்டங்களும் வரும். எல்லாவற்றையும் அனுசரித்து செல்லுங்கள். தோல்வி வரும்போது துவண்டு போய் உட்காராதீங்க. அடுத்து வெற்றியை காண்பிக்க கூடிய வழி, தோல்விதான் என்று துணிந்து செயல்படுங்கள். சொந்த தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இல்லை என்றாலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். யார்கிட்ட பேசினாலும் கொஞ்சம் தன்மையாக பேசுங்கள். முன்கோபம் படாதீர்கள். நல்லது நிச்சயம் நடக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்து வாருங்கள்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. எதிலும் ஜெயித்து காண்பித்து உங்களுடைய பெயரை நிலை நாட்டுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் குறைவியும். குறிப்பாக மாணவர்களுக்கு மேல் படிப்பில் அதிகாரித்து இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். இந்த வாரம் உங்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளை சந்திராஷ்டமம் உள்ளது. புதுசா எதையும் ஆரம்பிக்காதீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கும். கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு உழைத்து, துவண்டு போனவர்கள் கூட அப்படியே எழுந்து நிற்க போறீங்க. கஷ்டங்கள் எல்லாம் கடந்து போனது போல ஒரு உணர்வு. கஷ்டங்கள் கடந்து போனதா இல்லையா, என்று பிறகு பார்த்துக் கொள்வோம். அந்த மன நிம்மதியை அடையக்கூடிய வாரம் இது. ஆனாலும் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து உங்களை சுற்றி ஒரு கூட்டம் பொறாமைப்பட்டுக் கொண்டே இருக்கும். அவர்களை சமாளிக்கவே உங்களுக்கு சரியாக இருக்கும். எச்சரிக்கையா இருங்க. இந்த வாரம் 19, 20 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் காலையில் பெருமாள் வழிபாடு செய்யுங்கள்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில சங்கடங்கள் இருக்கும். மனதுக்கு பிடித்தவர்கள் தூரமாக இருப்பாங்க. அந்த கஷ்டத்தை சொல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆனால் வேறு வழி கிடையாது. இந்த கஷ்ட காலத்தை நீங்கள் கடந்து தான் செல்ல வேண்டும். குடும்பத்தை விட்டு சில பேர் பிரிந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை கூட ஏற்படும். யாருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்காதீங்க. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. பந்தயங்களில் சேராதீங்க. கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். கூடிய சீக்கிரத்தில் நல்ல காலம் பிறக்கும். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்கள் எல்லா விஷயங்களையும் கொஞ்சம் பாசிட்டிவாக யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். எதை எடுத்தாலும் நடக்காது, முடியாது என்று சொல்லாதீங்க. விடா முயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். சொல்வார் பேச்சை கேட்டு நடந்து கொண்டால் உங்களுடைய வாழ்க்கையில் தான் பிரச்சனை வரும். யார் சொல்வதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பக் கூடாது. சுய சிந்தனை ரொம்ப ரொம்ப அவசியம் தேவை. கொஞ்சம் பண பற்றாக்குறை இருந்தாலும் பண்டிகையை சந்தோஷமாக நிறைவாக கொண்டாடி முடிப்பீர்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam