ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 14-10-2022 முதல் 20-11-2022 வரை

15 Nov 2022

இந்த வார ராசிபலன் 14-10-2022 முதல் 20-11-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

 

 

 

மேஷம்:

மன தைரியத்தோடு எதையும் துணிந்து போராடும் குணாதிசயத்தை கொண்ட மேஷ ராசி நேயர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள். பிரச்சனையிலிருந்து வெளி வரக்கூடிய தந்திரம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகளை தாண்டி தான் முன்னேற்றம் கிடைக்கும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வாக்குவாதம் செய்யக்கூடாது. நீண்ட தூரப் பயணம் நன்மையை கொடுக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

முகத்தில் பிரகாசத்துடன் எப்போதும் கம்பீரமாக இருக்கும் ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு மன திருப்தியை கொடுக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. எல்லா விஷயத்தையும் கொஞ்சம் பிளான் பண்ணி செஞ்சுக்கோங்க. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

அறிவாற்றலில் அடுத்தவர்களை அதிர்ந்து போக வைக்கும் மிதுன ராசி நேயர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. எதையும் சமாளிக்கும் திறன் உங்களிடத்தில் உண்டு. நல்லது கெட்டது கலந்தது தானே வாழ்க்கை. ஆகவே சோர்ந்து போகாதீங்க. எந்த பிரச்சனை வந்தாலும் மன தைரியத்தோடு எதிர்த்தால் நாம் ஜெயிக்க முடியும். எந்த வேலையை தொட்டாலும் சில சிக்கல்கள் வரும். முன்பின் யோசிக்காமல் ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை வைக்காதீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மனநிறைவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் முன்கோபத்தை காட்டக் கூடாது. எந்த பிரச்சனை வந்தாலும் இருக்கிற வேலையே விடாதீங்க. புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

படிப்படியான முன்னேற்றத்தை அடையக்கூடிய கடக ராசி நேயர்களுக்கு புகழாரம் சூடக் கூடிய வாரமாக இது அமையப் போகின்றது. நிறைய நல்லது நடக்கப் போகின்ற வாரம் இது. உங்களுடைய அறிவாற்றலை அடுத்தவர்கள் புரிந்து கொண்டு பாராட்டி தள்ளப் போகிறார்கள். பூர்வீக சொத்து வழக்கு உங்கள் பக்கம் சாதகமாக முடியும். கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் கைக்கூடி வரும். பிள்ளை வரம் வேண்டி இருப்பவர்களுக்கு நல்லது செய்து காத்துக் கொண்டிருக்கிறது. வேலை பளு அதிகமாக இருக்கும். அலைச்சல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

ராஜ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. எதிரிகளால் பல பிரச்சினை காத்துக்கொண்டிருக்கின்றது. நீங்கள் எப்போது ஏமாறுவீர்கள் என்று எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உஷாராக இருந்து கொள்ளுங்கள். நண்பர்கள் என்று நினைத்துக் கூட யாரையும் நம்பாதீர்கள். மற்றபடி தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவீர்கள். பழைய கடன் வசூல் ஆகும். வேலை செய்யும் இடத்தில் எப்போதும் போல சுமூகமான நிலை இருக்கும். சுப காரிய நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன தடை வரும். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

கன்னி:

அறிவாற்றல் நிறைந்த அன்பான கன்னி ராசி நேயர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. யாரிடமும் முன் கோபப்படக்கூடாது. அனாவசியமான வார்த்தைகளை சொல்லி திட்டக்கூடாது. சில வார்த்தை வெல்லும். சில வார்த்தை கொள்ளும் என்பார்கள் அல்லவா, உங்கள் வார்த்தைகளால் தான் உங்கள் வாழ்வில் பிரச்சனையே வரும். தொழிலில் உஷாராக இருங்கள். யாரை நம்பியும் முதலீடு செய்யாதீர்கள். பார்ட்னரை முழுமையாக நம்பாதீங்க. கணக்கு வழக்கை நீங்களே சரி பாருங்கள். நெருங்கிய உறவுகள் சில பிரச்சனைகளை கொடுக்கும். செலவு அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போக கூடாது என்றால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும். தினம் தோறும் மனதை அமைதிப்படுத்த ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம் சொல்லுங்கள்.

 

துலாம்:

மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்து கொள்ளும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சோகமான வாரமாக இருக்கப் போகின்றது. நல்லது நடந்தாலும் உங்கள் மனது கஷ்டப்படும். கெட்டது நடந்தாலும் உங்களுடைய மனது கஷ்டப்படும். எதையோ இழந்தது போல இருக்கப் போகிறீர்கள். எல்லாவற்றையும் நேர்மறையாக சிந்தனை செய்யுங்கள்‌. பண வரவு அதிகரிக்கும். புதிய வாழ்க்கை துணை உங்களை தேடி வர போறாங்க. புதிய சொத்து சுகம் வாங்க வேண்டிய யோகம் இருக்கிறது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் தேடி வரும். இப்படி நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகின்றது. இருந்தாலும் அப்பப்ப சின்ன சின்ன மன கசப்பு தரும் சில சங்கடங்களும் வரும். அதையும் நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தினம் தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

 

விருச்சிகம்:

கொஞ்சம் முன்கோபத்தை வைத்துக் கொண்டிருக்கும் விருச்சிக ராசி நேயர்களுக்கு இந்த வாரம் செலவு கொஞ்சம் கையை கடிக்க போகின்றது. வீட்டில் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது பார்க்க வேண்டிய சூழ்நிலை வரும். வண்டி வாகனம் பிரச்சனை செய்யும். இப்படி நிறைய தேவையான செலவுகள் வரிசை கட்டி நிற்கும். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்த முடியாது. செலவு பட்ஜெட்டை தாண்டி விடும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. சேமிப்பு கரையும் போது கொஞ்சம் கஷ்டம் வரும். சரி அடுத்த மாதம் சேர்த்து சம்பாதித்துக் கொள்ளலாம். விரும்பியும் படி திருமணம் கைகூடி வரும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

தனுசு:

பின்னால் வருவதை முன்னாலேயே யோசிக்கும் திறன் கொண்ட தனுசு ராசி நேயர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் அமையப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும்‌. நீங்கள் நினைக்கும் நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த வார இறுதியில் சில முடிவுகளை எடுப்பதற்கு மனதில் தடுமாற்றம் இருக்கும். குழப்பத்தோடு மனநிலை இருந்தால், முடிவு எடுப்பதை தள்ளி போட்டுக் கொள்ளுங்கள். கமிஷன் தொழில் நல்லபடியாக நடக்கும். இந்த வாரம் 13, 14 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது ஜாக்கிரதை. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

வெற்றிகளை குவிக்கும் திறன் கொண்ட மகர ராசி நேயர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் தரும், மன நிறைவான வாரமாக இருக்கப் போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ம் சம்பள உயர்வு போனஸ் போன்ற பாராட்டுகள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தொழிலில் வரக்கூடிய போட்டிகளை வெல்வீர்கள். கட்டிடத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இது அமையும். இந்த வாரம் 15, 16 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

புத்திசாலித்தனத்தை தன்னுடனே தக்க வைத்துக் கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களுக்கு, இந்த வாரம் கொஞ்சம் கஷ்டமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பிடித்தவர்களை விட்டு தூர விலகி செல்லக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வெளிநாடுகளில் வேலை, வெளியூரில் வேலை என்று கூட உங்களுக்கு கிடைக்கலாம். சூதாடத்தில் ஈடுபடாதீங்க. நிறைய கடன் வாங்காதீங்க. மற்றபடி உங்களுடைய பேச்சு திறமையால் நீங்கள் எல்லாவற்றையும் சாதித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். நல்லது கெட்டதை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இருக்கின்ற உண்மையை வெளிப்படையாக பேசுங்கள். பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். இந்த வாரம் 17ஆம் தேதி சந்திராஷ்டமம் இருப்பதால், கவனம் தேவை. தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

அடுத்தவர்களை எடை போடும் திறன் கொண்ட மீன ராசி நேயர்களுக்கு இந்த வாரம் ஆச்சரியப்படக்கூடிய நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. இதுவரை பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப் போகின்றது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிலம் வாங்க கூடிய யோகம் இருக்கின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விட்டுப் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எதையும் பொறுமையாக கையாளுங்கள். நிறைய நல்லது நடக்கும். உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள் திருடு போவதற்கு சில சமயம் வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam