ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 12-9-2022 முதல் 18-9-2022 வரை

13 Sep 2022

 

 

இந்த வார ராசிபலன் 12-9-2022 முதல் 18-9-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். உடல் உபாதைகள் தீரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் சில பிக்கள் பிடுங்கள் இருக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டிய நிலைமை உண்டாகும். அனாவசியமாக அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். வியாபாரம் மந்தமாக போகும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கும். வீட்டில் உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். தந்தை வழி உறவுகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் என்னதான் உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. உடன் வேலை செய்பவர்களுடன் கொஞ்சம் ஜாக்கிரதையாக பழக வேண்டும். முக்கியமான ரகசியங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான வாரமாக இருக்கும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக இருக்கப் போகின்றது. வம்பு சண்டை தேடி வரும். வாய் தகறாரு கைகலப்பாக மாறுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக யார் விஷயத்திலும் தலையிட வேண்டாம். உங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும், உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். குறுக்கு வழியை நாட வேண்டாம். பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சில பேருக்கு இடம் மாற்றம் ஏற்படுவதற்கும். இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இருக்கும். இவ்வளவு இருந்தாலும் ஏதோ ஒரு மறைமுக எதிர்ப்பு உங்களுக்கு சின்ன சின்ன பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டே தான் வரும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும். 

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக தான் இருக்கப் போகின்றது. செலவுக்கேற்ற வரவு இருக்கும். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் அதிகரிக்கும். எல்லா விஷயங்களையும் புரிந்து அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்கள் மனது புண்படும்படி பேச மாட்டீர்கள். குடும்பத்தோடு கோயில் குளங்களுக்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் கை ஓங்கி இருக்கும். பிள்ளைகளின் மூலம் மன சந்தோஷம் பெறுவீர்கள். தினம்தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த ஒரு காரியத்திலும் முடிவு எடுக்கக் கூடாது. பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். உறவுகளிடம் அனாவசியமான வார்த்தைகளை பேசாதீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். வியாபாரத்தில் எப்போதும் போல சுமூகமான சூழ்நிலை நிலவும். பெரியதாக ஏற்ற இறக்கங்கள் இருக்காது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் செலவுகள் அதிகமாக இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆழம் தெரியாமல் எந்த ஒரு விஷயத்திலும் காலை விடாதீர்கள். குறிப்பாக சூதாட்டம் பக்கம் போகவே கூடாது. எதிர் பாலின நட்பு பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். இந்த வாரம் 14, 15 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா வேலைகளும் சட்டென முடிந்து விடும். எந்த ஒரு வேலைக்கும் நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவசியமே கிடையாது. கிடப்பில் போட்டு வைத்திருக்கும், பின் தங்கி இருக்கும் எல்லா வேலைகளையும் இந்த வாரம் எடுத்து முடித்துக் கொள்ளுங்கள். அரசாங்கத்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் அது உங்களுக்கு சாதகமாக அமையும். செலவுகள் ஒரு பக்கம் ஆகிக்கொண்டே இருந்தாலும், கை நிறைய வருமானம் ஒரு பக்கம் வந்து கொண்டே இருக்கும். சந்தோஷத்திற்கு குறைவு இருக்காது. வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். ஆனால் புதிய நட்பை மட்டும் அனுமதிக்காதீங்க. முன்பின் தெரியாதவர்களிடம் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். செலவை கொஞ்சம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எதிர்காலத்திற்கு நல்லது. தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. இது நாள் வரை உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கி விடும். எதையோ ஒன்றை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு சோகத்திலேயே மூழ்கி இருந்தவர்கள் கூட, இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கி விடுவீர்கள். வேலை வியாபாரம் இவைகளில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சின்ன சின்ன தலைவலி நிச்சயமாக வரும். பிள்ளைகள் எதிர்த்து பேசுவதால், மனைவி எதிர்த்து பேசுவதால், உடன் இருக்கும் சொந்த பந்தங்களின் விவாதத்தால் சில சங்கடங்கள் உண்டாகும். பிடிவாதத்தை கொஞ்சம் தளர்ந்து கொள்வது நல்லது. தினம் தோறும் காலையில் எழுந்தவுடன் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்யுங்கள்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. உங்கள் வாழ்க்கையில் எந்த தடைகள் வந்தாலும், அதற்கு உதவி செய்ய சொந்த பந்தங்களும் நட்புகளும் வந்து கை கொடுக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கு உண்டான யோகம் தேடி வரும். எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மனதிற்கு பிடித்த இடத்தில் சீட்டு கிடைக்கும். மனதிற்கு பிடித்த படிப்பை படிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். வியாபாரத்தில் முன்கோபம் கூடாது. மார்க்கெட்டில் கெட்ட பெயர் வாங்காமல் இருக்க வேண்டும் என்றால் எல்லா வகையிலும் அனுசரித்து செல்ல வேண்டும். தினமும் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் முன்பின் யோசிக்காமல் செய்யக்கூடாது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மன கசப்பான சில சம்பவங்கள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. மனதை தைரியப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வரும். உங்களுடைய பொருட்கள் திருடு போகவும் வாய்ப்புகள் உள்ளது. அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்ந்து போகும். மனமும் சோர்ந்து போகும். உங்களை நீங்கள் உற்சாகமாக வைத்துக் கொள்ள எப்போதும் ஸ்ரீ ராம ஜெய மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியம் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் செய்து பார்த்து விடலாம் என்று துணிந்து இறங்குவீர்கள். ஆனால் உங்களுக்கு சின்ன சின்ன ஏமாற்றம் ஏற்படும். நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நினைத்தபடி நடக்காததால் மன சோர்வு அடைவீர்கள். உங்களை சாய்க்க வேண்டும் என்று ஒரு கும்பல் உங்களை சுற்றி காத்துக் கொண்டிருக்கின்றது. அவர்களிடம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். நன்றாக பேசி பழகுகிறார்களே. என்று என்று ஏமாத்திறாதீங்க. உங்களுக்கு பின்னால் நீங்கள் நம்பிய ஆள் தான் முதலில் குழி தோண்டி கொண்டு இருப்பார்கள். கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வீர்கள். எவ்வளவு நாள் தான் இப்படி கஷ்டப்படுவது என்று லேசாக குறுக்கு வழியில் போலாமா என்று மனம் சிந்திக்கும். ஆனால் அது தவறு. தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. கஷ்டப்பட்டதற்க்கு ஒரு வெற்றி உங்களுக்கு நிச்சயம் இந்த வாரம் கிடைத்துவிடும். இதுநாள் வரை பட்ட துன்பத்துக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கும். துணிவோடு சில விஷயங்களில் முடிவெடுப்பது உங்களுக்கு சாதகமாக அமைந்து விடும். பொழுதுபோக்கிற்காக நண்பர்களுடன் சேர்ந்து கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது. கடன் வாங்க கூடாது. புதிய முதலீடுகளை அதிகமாக செய்யக் கூடாது. அரசு சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கின்றது. செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிக படுத்தலாம். தினம் தோறும். பெண் தெய்வ வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam