ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 11-07-2022 முதல் 17-072022 வரை

12 Jul 2022

 

 

இந்த வார ராசிபலன் 11-07-2022 முதல் 17-072022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் சுறுசுறுப்போடு செயல்பட்டு எல்லா வேலையிலும் வெற்றி காண்பீர்கள். எந்த முயற்சியிலும் தயக்கம் காட்ட மாட்டீர்கள். உங்களுடைய முகத்திலேயே உங்களுடைய வெற்றி எழுதி ஒட்டி இருக்கும். அந்த அளவிற்கு விசேஷ பலன்களை இந்த வாரம் கொடுக்கப் போகின்றது. குழப்பம் இல்லாமல் எந்த ஒரு சிக்கலையும் அவிழ்த்து விடுவீர்கள். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களால் அவ்வப்போது சின்னச் சின்ன சண்டை வந்து விலகுவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி வாக்குவாதம் செய்து கொள்ள வேண்டாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து விடுங்கள். தினம்தோறும் அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் வேலைக்கு செல்பவர்கள் உங்களுடைய வேலையில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தேவையில்லாத சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்தின் போது நன்மை நடக்கும். வீட்டில் வாழ்க்கைத் துணைக்கு தேவையான பொருட்களை பரிசாக கொடுத்து மகிழ்வீர்கள். வியாபாரத்திற்கு தேவையான முதலீடு விரிவுபடுத்த வங்கிகளில் கடன் கிடைக்கும். இந்த மாதம் 12,, 13 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. கவனம் தேவை. தினம்தோறும் சிவன் வழிபாடு செய்வது நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கூடுதலான கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. இன்றைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றைய செய்து முடித்து விடுங்கள். நாளை என்று தள்ளிப் போடவே வேண்டாம். அது சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அரைகுறையாக கட்டி விட்டிருந்த வீட்டை முழுமையாக கட்டி முடிப்பதற்கு தேவையான பண வரவு இருக்கும். சொத்து சேர்க்கை இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது. சுப காரிய தடை விலகும். உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசி காரர்கள் இந்த வாரம் முழுவதும் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும்‌. எப்போதும் போல பண வரவு இருந்தாலும், கொஞ்சம் வீண்விரயம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். வெளியூர் பயணங்கள் செல்லாமல் இருப்பது நல்லது. சொந்தத் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணம் சம்பந்தப்பட்ட பரிமாற்றங்களில் நீங்கள் போய் முன்னே நிற்காதீர்கள். ஜாமின் கையெழுத்து யாரை நம்பியும் போட வேண்டாம். பண விஷயங்களில் ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டை அழகு படுத்தக் கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்ல வேண்டும். தேவையற்ற சண்டைகளை பெரியதாக்கி விடாதீர்கள். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரம் ஆகத்தான் இருக்கப் போகின்றது. நீங்கள் செய்யக்கூடிய வேலையை அப்படியே செய்து வந்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எதுவாக இருந்தாலும் அடுத்த வாரம் தள்ளி போடுங்கள். அவசரமாக முடிவு எடுக்க வேண்டும் என்றால் பெரியவர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது. தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் கொஞ்சம் திட்டு வாங்க வேண்டி இருக்கும். உடன் வேலை செய்பவர்களையும் அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். சில இடங்களில் தலைகுனிவு வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அனுசரித்து செல்லுங்கள். எல்லாம் இந்த வார இறுதியில் சரியாகிவிடும். தினம்தோறும் அனுமன் வழிபாடு செய்து வாருங்கள்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருந்தாலும் எல்லா விஷயங்களிலும் நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். ஒரு பொருளை 100 ரூபாய் கொடுத்து வாங்குவீர்கள். ஆனால் அந்த பொருளின் உண்மையான விலை 20 ரூபாய் கூட இருக்காது. அந்த அளவிற்கு நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பா உங்க கூடவே இருக்கிற நண்பர்களை நம்பவே நம்பாதீங்க. கொஞ்சம் எல்லோரிடமும் விலகி இருப்பது நல்லது. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கும். சொந்த தொழில் எப்போதும் போல செல்லும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. தினமும் மனதிற்குள் ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை சொல்லி வாருங்கள்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவழிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் ரொம்பவும் நெருக்கமான நண்பர்களிடம் கூட அதிகம் பேசாதீர்கள். பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். வம்பு சண்டை வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சுகமா வாங்க கூடிய யோகம் இருக்கிறது. தினம்தோறும் பெருமாள் வழிபாடு மன நிம்மதியை கொடுக்கும்.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் வாக்குவாதம் செய்யக்கூடாது. பெரியவர்களிடத்தில் அனுசரணையாக பேச வேண்டும். யாரையும் எடுத்தறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் கொஞ்சம் அக்கறையோடு செயல்படுங்கள். யாரை நம்பியும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். மற்றபடி கமிஷன் வாங்கி தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பிள்ளைகளின் மீது கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அவர்கள் படிக்கிறார்களா அல்லது விளையாடுகிறார்களா மொபைலில் என்ன பார்க்கிறார்கள் முதல் கொண்டு நுணுக்கமாக கவனிக்க வேண்டும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் மனதில் நினைத்ததை சாதிப்பீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். நேபாதையில் சென்று கிடைக்க கூடிய வெற்றி தான் நிலையானது. பிரச்சினைகள் வராதது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்காது. யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து தான் செல்ல வேண்டும். மற்றபடி செய்யும் தொழிலில் வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சேமிப்பு உயரும். பண வரவு அதிகரிக்கும். கோபத்தில் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். முன்கோபம் கூடவே கூடாது. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கப் போகின்றது. நீங்கள் நடக்கவே நடக்காது என்ற நன்மை கூட உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நாள் கனவு நினைவாக மாறும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மனைவியிடத்தில் அன்பு காட்டுகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆனால் முன்பின் தெரியாதவர்களிடம் பழகும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். யாரிடம் ஆவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேன் ஒழுக பேசி உங்களை சிக்கலில் தள்ளி விடுவார்கள். வெளியிடங்களுக்கு செல்லும்போது உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை கவனம் குறைவான இடத்தில் வைக்க வேண்டாம். தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் நிறைந்த வாரமாகத் தான் இருக்கப்போகின்றது. ஆனால் அதை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். இருந்தாலும் சிக்கல்களில் சிக்கி தான் வெளிவர வேண்டிய சூழ்நிலை இருக்கும். கையில் இருக்கும் பணத்தை எதிலும் முதலீடாக நம்பி போட வேண்டாம். சொந்த தொழிலில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பண விரயம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது‌. உறவுகள் இடையே அனுசரணையாக பேச வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத சூழ்நிலை உண்டாகும். ஒட்டுமொத்தமாக பார்த்தால் கொஞ்சம் சிக்கல்களை இந்த வாரம் சமாளித்து தான் ஆக வேண்டும். இவ்வளவு பிரச்சனை இருந்தாலும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி வழிபாடு செய்து வாருங்கள். நன்மை நடக்கும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை வரக்கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. அனாவசிய செலவு கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் சுபச் செலவுகள் வரும். விருந்தாளிகளின் வருகையால் செலவு இரட்டிப்பாக போகின்றது. கடன் வாங்குவதாக இருந்தாலும் கொடுப்பதாக இருந்தாலும் பத்திரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படித்து பாருங்கள். மற்றபடி கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் பிரச்சனைகள் பெரிதாவதற்கு வாய்ப்பு இல்லை. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்த உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam