ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 10-10-2022 முதல் 16-10-2022 வரை

11 Oct 2022

 

 

 

இந்த வார ராசிபலன் 10-10-2022 முதல் 16-10-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. செய்யும் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செய்யும் தொழில் நிறைய லாபத்தை பெற்று தரும். பிள்ளைகளால் மனநிறைவு அடைவீர்கள். நீண்ட நாள் வசூல் ஆகாத கடன் வசூல் ஆகும். வீட்டில் விருந்தினர்களின் வருகையால் கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். சுப காரியங்கள் சுலமாக நடக்கும். வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கின்றது. கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை என்று வந்தால் அனுசரித்து செல்லுங்கள். வாக்குவாதம் வேண்டாம். தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து போகும். புதிய முயற்சிகளை உங்கள் கையால் தொடங்க வேண்டாம். ரொம்பவும் முக்கியமான விஷயமாக இருந்தால் கூட, உங்களுடைய மனைவி கையாலோ அல்லது குழந்தைகளின் கையாலோ புதியதாக ஒரு வேலையை தொடங்கிக் கொள்ளலாம். அதாவது உங்க பெயரை பயன்படுத்தாமல் வேறு ஒருவரின் பெயரில் புதிய விஷயங்களை தொடங்குங்கள். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். சொந்த தொழிலில் ஏற்ற இறக்கத்தோடு வருமானம் இருக்கும். சூதாட்டத்தில் ஈடுபடக் கூடாது. எல்லாரையும் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். முன்கோபடாதீர்கள். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் சூழ்ந்த வாரமாகத்தான் இருக்கப்போகின்றது. குறிப்பாக பண பிரச்சனை இருக்கும். சேமிப்பு கரையும். வருமானத்திற்கு அதிகமான செலவை சமாளிக்க, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கும். நிறைய நல்ல முன்னேற்றங்கள் படிப்படியாக வரும். வாய்ப்புகளை தவிர விடாதீங்க. புதிய வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளலாம். இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கும் நல்ல வருமானம் இருக்கும். வீட்டில் கொஞ்சம் சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். செலவை சமாளிக்க கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். இருந்தாலும் தேவைக்கு ஏற்ப பணவரவும் இருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. பேராசைப்படாதீங்க. அளவோடு ஆசைப்பட்டால் எல்லாம் நன்மையாகவே நடக்கும். இந்த வாரம் சிவன் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் விரத்தியான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. எது நடந்தால் என்ன, நாம் செய்யும் வேலையை சரியாக செய்யலாம் என்று நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையை செய்வீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களின் மூலம் சில இடையூறுகள் வரும். நண்பர்கள் கூட பகைவர்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. லேசான மன குழப்பமும் மனக்கவலையும் இருக்கும். கவலைப்படாதீங்க, மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலை 5 நிமிடம் தியானம் செய்யுங்கள். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது. வார்த்தையில் கவனம் தேவை. அவசரப்பட்டு எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு நஷ்டத்தை கொடுத்து விடும். மற்றபடி பொறுமையாக செயல்பட்டால் எல்லாம் நல்லதாகவே நடக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர் பாலின நட்பை தவிர்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்துங்கள். இந்த வாரம் 11, 12 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும். - Advertisement -

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கலான வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்தையும் முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள். நாளைக்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இன்றைக்கு முடிவு செய்து வைத்தால்தான், நாளை பிரச்சனை இல்லாமல் ஓடும். புதிய முயற்சிகளை அடுத்த வாரம் தள்ளி வையுங்கள். முன்பின் தெரியாத விஷயத்தில் தலையிட வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் உஷாராக இருக்கவும். யாரையும் நம்பாதீங்க. கண்ணை மூடிக்கொண்டு அடுத்தவர்களை நம்பினால் அவமானப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. செலவு அதிகரிக்கும். வரவு கம்மியாக தான் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மன பயம் இருக்கக் கூடாது. நேர்வழியில் நடக்க வேண்டும். துணிச்சலோடு செயல்பட வேண்டும். இந்த வாரம் 13ஆம் தேதி சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கும். இருப்பினும் எல்லா விஷயத்திலும் நிறைய போட்டிகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் போட்டி, சொந்த தொழிலில் போட்டி, வியாபாரத்தில் போட்டி, என்று போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண வேண்டிய காலம் இது. மன தைரியத்தோடு செயல்படுங்கள். எதை நினைத்தும் பயப்பட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கூவியும். சம்பள உயர்வு கிடைக்கும். தீபாவளி போனஸ் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரும். கணவன் மனைவிக்குள் ஒத்து வராது. வாக்குவாதம் உண்டாகும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கணும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கப் போகின்றது. செலவுக்கு ஏற்ற வருமானம் இருக்கும். வருமானத்தை சேமிப்பீர்கள். வரக்கூடிய பண்டிகைகளுக்கு தேவையான ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களைக் கண்டு பயந்து ஓடுவார்கள். அந்த அளவிற்கு துணிச்சலான சில வேலைகளை செய்வீர்கள். வீடு கட்டும் யோகம் உள்ளது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். குழந்தையின் அழுகை சத்தம் கேட்கக்கூடிய நேரம் இது. சில நேரங்களில் பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக முடித்து விடுவீர்கள். அந்த அளவுக்கு சமயோசித புத்தியுடன் செயல்படுவீங்க. தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. என்னதான் விழுந்து விழுந்து உழைத்தாலும் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்காது. அதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர்கள் செய்த தவறுக்கு கூட நீங்க தீட்டு வாங்குவீங்க. ஏற்ற இறக்கத்தோடு தான் நன்மைகள் நடக்கும். பெரியவர்களின் சொல் பேச்சு கேட்டு நடப்பது நல்லது. நீங்களே சுயமாக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. குறிப்பாக முன்பின் தெரியாதவர்களின் பேச்சைக் கேட்கக் கூடாது. தேன் ஒழுக பேசி, உங்களை ஏமாற்றி விடுவார்கள். காசு விஷயத்தில் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்த்த, உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நிறைய நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து விலகும். சின்ன பிரச்சினையாக இருந்தால் அதை பேசி பேசி பெருசாகாதிங்க. மறப்போம் மன்னிப்போம் என்று இருங்கள். அதுதான் வாழ்க்கைக்கு நல்லது. குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நன்மை தரும். கூடுமானவரை இப்போது வெளியூர் பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவசியமாக வெளியூர் செல்ல வேண்டும் என்றால் பாதுகாப்பு கொஞ்சம் பலமாக இருக்கட்டும். இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி எல்லாம் நன்மையாகவே நடக்கும். தினம் தோறும் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் துணிச்சலாக தான் செயல்பட வேண்டும். வேறு வழியே கிடையாது. சில விஷயங்களில் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று முடிவு எடுத்தால்தான் வாழ்க்கையின் அடுத்த கட்டம் சுவாரசியமாக இருக்கும். இல்லை என்றால் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுதான். மன பயம் நீங்கி தெளிவான எண்ணம் பிறக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். மீன ராசிக்காரர்கள் கட்டாயமாக இந்த வாரம் மட்டுமல்ல, எப்போதுமே இனி குறுக்கு வழியில் செல்லக்கூடாது. நேர்மையாக நடந்து கொண்டால் இன்று வேண்டுமென்றால் கஷ்டமாக இருக்கலாம், ஆனால் அதற்கான பலன் கூடிய விரைவில் வந்து சேரும். நல்லதே நடக்கும். தினமும் முருகர் வழிபாடு செய்யுங்கள்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam