ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 05-12-2022 முதல் 11-12-2022 வரை

07 Dec 2022

 

இந்த வார ராசிபலன் 05-12-2022 முதல் 11-12-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

 

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். குறிப்பாக நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து வாட்டி வதைக்கும். பணக்கஷ்டத்தை சமாளிக்க சின்ன சின்ன கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கவலைப்படாதீர்கள். இந்த வார இறுதிக்குள் எல்லாம் சரியாகிவிடும். சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமின் கையெழுத்து போடாதீங்க. மற்றபடி வீட்டில் சுப காரியம் நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தினம் தோறும் ஹனுமான் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வருமானம் சீராக இருக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைப்பதற்கு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுப காரிய நிகழ்ச்சிகளை கொஞ்ச நாட்கள் தள்ளி வைத்துக் கொள்வது நல்லது. புதுசாக ஒரு நபரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவர்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தினம் தோறும் அண்ணாமலையாரின் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உஷாராக இருக்க வேண்டிய வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய எதிரிகள் கண்ணுக்கு தெரிந்தும், கண்ணுக்குத் தெரியாமலும் உங்களை வீழ்த்த காத்துக் கொண்டிருக்கிறார்கள். உஷாராக இருந்துக்கோங்க. யாரையும் நம்பாதீர்கள். உங்களுடைய சொந்த விஷயத்தை, நம்பி மூன்றாவது மனிதரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அது உங்களுடைய குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணிவிடும். நீண்ட தூரம் பயணம் நன்மையை கொடுக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். தினம் தோறும் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம் சொல்லுவது நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி தரக்கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. சொந்த தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிறைய லாபம் கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்க தொடங்கும். சொந்த பந்தங்கள் இடையே கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது. தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் படிப்படியான முன்னேற்றத்தை அடையக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக வராத நல்ல செய்தி இந்த வார முடிவுக்குள் வந்து சேரும். அரசாங்க உத்தியோகத்திற்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. பேசியே உங்களுடைய வேலையை சாதுரியமாக முடித்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரும். யாராவது ஒருத்தி விட்டுக் கொடுத்து சென்று தான் ஆக வேண்டும். இல்லை என்றால் விரிசல் பெரிதாகிவிடும். நிதானம் தேவை. தினம் தோறும் துர்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்லது ஒன்று நடக்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்கள் முதல் பெரிய பெரிய வியாபாரம் செய்பவர்கள் வரை எதிர்ப்பார்க்காத அளவுக்கு லாபத்தை பெறுவீர்கள். உங்களுடைய திறமையால் நல்ல பெயர் கிடைக்கப் போகின்றது. புகழின் உச்சிக்கே செல்வீர்கள். குறிப்பா அடுத்தவர்களுடைய விஷயத்துக்கு பஞ்சாயத்து செய்து நல்ல பெயரை வாங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சொத்து சுகம் சேரும். வக்கீல் தொழிலில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். கட்டுமான தொழில் பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும். இந்த வாரம் 5, 6 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கல்கள் நிறைந்த வாரமாகத் தான் இருக்கும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு சுலபமான தீர்ப்பு கிடைக்காது. ஒரு பிரச்சனை போக அடுத்த பிரச்சனை வந்து தூக்கத்தை கெடுக்கும். இருப்பினும் எல்லா விஷயத்தையும் சமாளிக்கும் அளவுக்கு உங்களுக்கு மன தைரியமும் இருக்கும். தினமும் காலையில் எழுந்தவுடன் மனதை அமைதி படுத்த 10 நிமிடம் தியானம் செய்யுங்கள். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். பொறுமையாக பெரியவர்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் 7, 8 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை, முடிந்தால் ஒரு நாள் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று வழிபாடு செய்வது நல்லது.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் கடுமையான பணத்தட்டுப்பாடு இருக்கும். சம்பளம் வரும், எக்ஸ்ட்ரா போனஸ் கூட வரும். ஆனால் பத்தாது. கையில் வந்த பணம் பஞ்சாக பறக்க போகின்றது‌. கவலைப்படாதீங்க உங்களுடைய வாழ்க்கை துணை, உங்களுக்கு உதவியாக இருப்பாங்க. பணம் கொடுத்து உதவுவாங்க. அதிக வட்டிக்கு காசு பணம் கடனாக வாங்காதீங்க. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் தடை விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன தோல்விகள் ஏற்படும். ஆசைப்பட்டு நீங்கள் செய்யக்கூடிய விஷயம் உடனடியாக உங்களுக்கு நல்லதொரு பலனை கொடுக்காது. கொஞ்சம் மனம் சோர்ந்து போவீங்க. கவலைப்படாதீங்க, தோல்விதான் வெற்றிக்கு முதல் படி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். விடாமுயற்சியோடு ஒரு விஷயத்தை செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். சொந்த பந்தங்கள் சண்டை சச்சரவுக்கு வருவார்கள். வீட்டிலும் சின்ன சின்ன தகராறுகள் நடக்கும். பொறுமை காக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். ஆசிரியர் தொழில் செய்பவர்கள் கலைஞர்கள் வக்கீல்கள் இவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான பலன் உண்டு. தினம் தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் சொல்லுங்கள்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடுமையான போராட்டமும் உழைப்பும் இருக்கும். எப்படியாவது எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று போராடி ஜெயிக்கப் போகிறீர்கள். சோர்ந்து போகவே மாட்டீர்கள். சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். நாளைக்கு வேலையை கூட இன்றே செய்து முடித்து விடுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களிடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். உழைத்தால் இவனை போல உழைக்க வேண்டும் என்று ஊரே பேசும் என்றால் பாருங்களேன். கவலையே படாதீங்க. உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கும். அங்கீகாரமும் உங்களுக்கு கிடைக்கும். மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுங்க. அவசரப்படாதீங்க. சொந்த வீடு வாங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அஷ்டலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வசூல் ஆகாத பழைய கடன் பாக்கி கூட வசூல் ஆகிவிடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்துவீர்கள். பெரிய அளவில் ஆர்டர்களும் கிடைக்கும். யாரையும் நம்பி பணம் காசை கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. வாக்கு கொடுத்து மாட்டிக்காதீங்க. உங்களுடைய வேலைகளை நீங்கள் செய்தால் எந்த பிரச்சனையும் கிடையாது. அடுத்தவர்களுடைய வேலையில் மூக்கை நுழைக்கும் போது சில பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய மதிப்பும் மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் கூடுதல் உழைப்பை போட்டால், நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். மேல் படிப்புக்காக மாணவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெளிநாட்டிற்கு சென்று கூட படிக்கலாம். நல்லது நடக்கும். சில பேருக்கு லோன் கட்டுவதில் சில சிரமங்கள் இருக்கும். மற்றபடி பெரியதாக எந்த பிரச்சனையும் வராது. தினம்தோறும் ஈசனை வழிபாடு செய்வது மன அமைதியை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam