ஜோதிடம் செய்திகள்

இந்த வார ராசிபலன் 04-07-2022 முதல் 10-07-2022 வரை

05 Jul 2022

 

 

 

இந்த வார ராசிபலன் 04-07-2022 முதல் 10-07-2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் கடின உழைப்போடு வேலை செய்வீர்கள். விடாமுயற்சியுடன் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுவீர்கள். சொந்தத் தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்பதற்காக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுங்கள். குறிப்பாக பண விஷயங்களில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். திருமண பேச்சு வார்த்தைகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

 

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்களே எதிர்பார்க்காத நிறைய நல்லது உங்கள் வாழ்வில் நடக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சோம்பேறித்தனம் பக்கத்தில் கூட நிற்காது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மனைவிக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷப்படுத்துவீர்கள். வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வது மிகவும் நல்லது. சாலையில் நடந்து போவதாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொத்து சுகம் வாங்குவதாக இருந்தால் கொஞ்சம் உஷாராக இருங்கள். யாரிடமாவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு குவியும். தினம்தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

 

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். ஆனால் அதே பேச்சினால் பிரச்சனை வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இடம் பொருள் ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாக இரும்பு சம்பந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு நிறைய லாபத்தை எதிர்பார்க்கலாம். சொந்த வீடு கட்டும் யோகம் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களுடன் பேசும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். நண்பர்களும் துரோகியாக மாறலாம். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

 

கடகம்:

கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரம் ஆகத்தான் இருக்கப் போகின்றது. சொந்த பந்தங்கள் இடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். பண சிக்கல் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் சில குளறுபடி நடைபெறும். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். விலை மதிப்பான பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையற்ற சஞ்சலம் ஏதோ ஒன்று அடி மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது. தேவையில்லாமல் அடுத்தவர்களுடைய பிரச்சனையில் தலையிடாதீங்க. கணவன் மனைவி உறவுக்கிடையே விட்டுக் கொடுத்த நல்லது மிகவும் நல்லது. மனதிற்குள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட நிறைய திருப்புமுனை உண்டாகும். கமிஷன் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையை கண்டும் பின்வாங்க மாட்டீர்கள். ஒருகை பார்த்து விடலாம் என்று துணிச்சலோடு இறங்கி, அந்த வேலையை வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து விடுங்கள். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எந்த ஒரு மன சஞ்சலமும் இல்லாத வாரமாக இருக்கப் போகின்றது. மன அமைதி இருக்கும். சந்தோஷமாக நாட்களைக் கடந்த செல்வீர்கள். ஆனால் தேவையற்ற விவகாரங்களில் வாயை திறக்காதீர்கள். நீங்கள் நல்லதே பேசினாலும் அது அடுத்தவர்களுக்கு கெட்டதாக தெரியும். வாய் சண்டை, சின்ன சின்ன கை கலப்பு தகராறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யார்கிட்டயும் சவால் விட்டு பேச வேண்டாம். யார்கிட்டயும் வாக்கு கொடுக்க வேண்டாம். சுப காரியங்கள் வீட்டில் நல்லபடியாக நடந்து முடியும். எதிரிகள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு உங்களுடைய வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை தரும்.

 

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா விஷயமும் கொஞ்சம் இழுபறியாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் தொடங்கிய பின்பு சட்டென முடித்தோமா என்று இருக்காது. எல்லா வேலையிலும் தாமதம் ஏற்படுவதால், மனம் கொஞ்சம் அசதியாக இருக்கும். எதையும் கண்டு பயப்பட வேண்டாம். எதுவுமே நடக்கவில்லையே என்று அசந்து போய் உட்காரவும் வேண்டாம். உங்களுடைய முயற்சிகளை செய்து கொண்டே வாருங்கள். இந்த வார இறுதிக்குள் எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். திருமண விவகாரங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொஞ்சம் வீண் விரையும் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்ப செலவுகள் கையை கடிக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை வந்தாலும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

விருச்சிகம்:

விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சிக்கலான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பண பிரச்சனை இருக்கும். வருமானத்தில் சிக்கல் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதி இல்லாத சூழல் இருக்கும். ஆனால் வேலையை விட்டு விட வேண்டும் என்ற முடிவுக்கு மட்டும் வராதீங்க. ஒரு சில நாட்களில் பிரச்சனை சரியாகிவிடும். கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் தொல்லை இருக்கும். என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் குழம்பி போய் நிற்பீர்கள். கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு உங்களுடைய மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை செய்யுங்கள். மற்றவர்கள் பேச்சுக்கு செவி சாய்க்காதீர்கள். தினமும் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அதன் பின்பு ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி மனதை அமைதிப்படுத்தி ஐந்து நிமிடம் தியானம் செய்தால் நல்லது நடக்கும்.

 

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களை யாரெல்லாம் ஏளனமாக பேசினார்களோ அவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழும் அளவிற்கு நல்ல சம்பவங்கள் நடக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். எதுவாக இருந்தாலும் நேர் பாதையில் செல்லுங்கள்‌. குறுக்கு வழியை தேர்ந்தெடுக்காதீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் நினைத்த நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தினம்தோறும் வராகி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதை செய்தாலும் அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சுறுசுறுப்பில் எறும்பையும் மிஞ்சப் போகிறீர்கள் என்றால் பாருங்களேன். அந்த அளவிற்கு இந்த வாரம் முழுவதும் ஓட்டம் ஓட்டமாக இருந்தாலும் மனது சோர்வை அடையாது. உடலில் லேசாக அசதி ஏற்படும். கொஞ்சம் ஓய்வு எடுப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. புதிய சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்குவதாக இருந்தால் ஆவணங்களை சரியாக சரி பார்த்துக் கொள்ளவும். பத்திரங்களில் கையெழுத்து போடுவதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை படிப்பது நல்லது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்தால் சின்ன சின்ன நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்கலாம். இந்த மாதம் 4, 5 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது ஜாக்கிரதை. தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

 

கும்பம்:

Rasi கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய வேலையை அப்படியே செய்து வாருங்கள். எந்த பிரச்சனையும் வராது. கூடுமானவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை உயர்த்துங்கள். கடன் வாங்க வேண்டாம். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் கூட சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த வாரம் கொஞ்சம் தலை பாரத்தை கொடுக்கத்தான் செய்யும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். கணவன் மனைவி கடையே விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். வீண் வாக்குவாதம் கூடாது. சொந்தத் தொழிலில் சில தடைகள் வரலாம். எதிர்பாலின நட்புடன் கொஞ்சம் கவனமாக இருங்கள். இந்த வாரம் 6, 7 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணத்தட்டுப்பாடு வரும். தேவையற்ற செலவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இதை கடந்து விடலாம் என்ற மனப்பக்குவம் உங்களிடம் இருக்கும். இருப்பினும் எதிலும் கொஞ்சம் நின்று நிதானமாக யோசித்து செயல்படுங்கள். அவசரப்படாதீர்கள். வியாபாரத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. சுமுகமாக நடக்கும். சொத்து சுகத்தை விற்பதாக இருந்தால் இந்த வாரம் விற்கலாம். நல்ல லாபத்திற்கு போகும். வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். மேலதிகாரிகளின் பார்வை உங்கள் மேல் விழும். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்துவிட்டு முழு முயற்சியோடு ஈடுபட்டால் நீங்கள் தான் புத்திசாலி. தினம் தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam