இலங்கை செய்திகள்

இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்கலாம் -சிவாஜிலிங்கம்

12 Jun 2018

“இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்கலாம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். ஆனால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” 

இவ்வாறு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.  வடக்கு மாகாண சபையின் 124 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் சபைத் தவலைர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட செயலணிகள் தொடர்பாக உரையாற்றிக்கொண்டிருந்த  வேளையிலேயே பிரதி அமைச்சர்கள் நியமனங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார். 

இது தொடர்பில் அங்கு உரையாற்றுகையில், “ஜனாதிபதி சித்த பிரமை பிடித்தவர்கள் போல் செயற்படுகிறார். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளமையினால் இது தெளிவாகிறது” என அவர் கூறினார்.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்