விளையாட்டு செய்திகள்

இந்திய வீரர் சவுரப் வர்மா ‘சாம்பியன்’

12 Aug 2019

ஐதராபாத் ஓபன் பேட்மிண்டனில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா, சிங்கப்பூர் வீரர் லோ கியான் யேவை சந்தித்தார். 52 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் தேசிய சாம்பியனான சவுரப் வர்மா 21-13, 14-21, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான சவுரப் வர்மா ‘சூப்பர் 100 வகை’ பேட்மிண்டனில் வென்ற 3-வது பட்டம் இதுவாகும்.

இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா- சிக்கி ரெட்டி ஜோடி 17-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் கொரியாவின் பாக் ஹா நா- ஜங் கியங் இன் இணையிடம் வீழ்ந்தது.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்